games

img

கால்பந்தின் புதிய சகாப்தம்: பாலா தேவி

மணிப்பூர் மாநிலம் என்றாலே விளை யாட்டு வீரர்களின் பூமி என்று சொல்லலாம். குத்துச் சண்டை வீரர்கள் மேரி கோம், சரிதா தேவி, பளுதூக்கும் வீராங்கனைகள் குஞ்சராணி தேவி, மீராபாய் சானு என பல சர்வதேச சாதனை யாளர்களை உருவாக்கிய மண் அது. அந்த மண்ணில் இருந்து உருவான மற்றொரு சாதனையாளர்தான் கால்பந்து  வீராங்கனை நாங்கோம் பாலா தேவி. 1990 ஆம் ஆண்டு பிப்ர வரி 2 ஆம் தேதி, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரெங் பாம் என்ற சிறிய கிராமத்தில் பாலா தேவி பிறந்தார். உள்ளூரில் கால்பந்து விளை யாடி வந்த தந்தையைப் பார்த்து வளர்ந்த அவர், சிறு  வயதிலிருந்தே கிராமத்து இளைஞர்களுடன் கால்பந்து விளையாடினார். தான் இந்தியாவுக்காக விளையாட விரும்பு வதாக தந்தையிடம் கூறியதும், அவர் பயிற்சியாளராக மாறி னார். பதினோரு வயதில், தனது கிராமத்தில் பெண்களுக்கான  கால்பந்து கிளப் ஒன்றில் மூத்த வீராங்கனைகளுடன் விளை யாடத் தொடங்கினார் பாலா தேவி. குடும்ப வறுமைக்கு மத்தியில், குறைந்த வயதிலேயே தேசிய அணிக்குத் தேர்வா னார். கால்பந்தை வலிமையுடன் எதிர்கொண்டு குடும்பத்தின்  வலிகளை மறந்தார். இன்று இந்தியாவின் அதிக கோல்கள் அடித்த வீராங்க னையாக திகழ்கிறார் பாலா தேவி. மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான இவர்,  பிரேசில் கால்பந்து நட்சத்தி ரங்களான ரொனால்டோ, ரொனால்டினோவை தனது ரோல் மாடல்களாகக் கொண்ட வர். இந்திய அணிக்காக 58  சர்வதேச போட்டிகளில் விளை யாடி 52 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். உலகளவில் 2015, 2016 மற்றும் 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் சிறந்த பெண் வீராங்கனை விருதையும், மூன்று முறை தெற்காசிய கால் பந்து சாம்பியன் கோப்பைகளை யும் வென்று கொடுத்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து கிளப்பு களில் பிரபலமான ரேஞ்சர்ஸ் எப்சியுடன் விளையாட ஒப்பந்தமிட்ட முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பாலா தேவியின் சாதனைகளைப் பாராட்டி மணிப்பூர் மாநில அரசு, அவருக்கு காவல் ஆய்வாளர் பதவி வழங்கி யுள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த சர்வதேச போட்டியில் தனது 50 ஆவது கோலை பதிவு செய்து புதிய  சாதனை படைத்துள்ளார். மணிப்பூரில் நிலவும் பதற்றமான  சூழ்நிலையிலும், விளையாட்டின் மீதான பற்றால் தொ டர்ந்து முன்னேறி வரும் பாலா தேவி, இளம் தலைமுறை யினருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.