பாசிசம் என்பது உயிர்களைப் பறிப்பது
நாசிசம் என்பது உரிமைகள் பறிப்பது
பாசிசம் நாசிசம் ஒன்றாய்ச் சேர்ந்த
ராட்சசம் தான்இன்று மணிப்பூரில் நடப்பது
வெந்து பொசுங்கி விறகாய் வேகிறோம்
எந்த மாதிரி தேசத்தில் வாழ்கிறோம்
தெருவெல்லாம் மாறிடும் ரத்தச் சகதியாய்
தெறித்து ஓடுவார் மக்கள் அகதியாய்
வீடுகள் எரியும் கடைகள் எரியும்
வாகனம் எரியும் முடிவே இல்லை
பெண்கள் கதறல் பிள்ளைகள் கதறல்
ஆள்வோர் நெஞ்சைத் தொடவே இல்லை
உலகெல்லாம் சுற்றும் ஏழைத்தாய் மகன்கால்
மணிப்பூரில் இன்னும் படவே இல்லை
ஒன்னரை ஆண்டு ஓடி விட்டது
இன்னும் அங்கே விடிவே இல்லை
வீசும் காற்றில் குளிர்ச்சி இல்லை
பூக்கும் செடியில் மலர்ச்சி இல்லை
சந்திரன் சூரியன் வந்திடும் ஆனால்
அந்த மண்ணில் வெளிச்சம் இல்லை
முதல்வர் என்பவர் மாநிலத் தந்தை
பிரதமர் என்பவர் தேசத் தந்தை
உங்கள் குழந்தைகள் கொல்லப்படும் போது
எப்படி மௌனமாய் இருக்கிறீர் மன்னவரே!