பார்டர் - கவாஸ்கர் டிராபி பெர்த்தில் விக்கெட் மழை இந்தியா - ஆஸ்திரேலியா இரு அணிகளும் திணறல்
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டிற் குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் ளது. பார்டர் - கவாஸ்கர் டிராபி என்ற பெயரில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலிய நாட்டின் பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதிக இளம் வீரர்களுடன் களமிறங் கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவின் ஹாசில்வுட் (4 விக்கெட்டுகள்), ஸ்டார்க் (2 விக்கெட்டுகள்), மிட்சல் மார்ஷ் (2 விக்கெட்டுகள்), கம்மின்ஸ் (2 விக்கெட்டுகள்) ஆகியோரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 49.4 ஓவர்களில் 150 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியாவிற்கும் சோகம்... இந்திய அணியை எளிதில் சுருட்டிய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பெவிலியனுக்குச் சென்று மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தன. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு இந்திய வீரர்கள் பதில் தாக்கு தல் தொடுத்தனர். இந்த தாக்குதலால் ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் சுக்கு நூறாக நொறுங்கியது. கேப்டன் பும்ரா (4 விக்கெட்டுகள்), முகமது சிராஜ் (2 விக்கெட்டுகள்), ஹர்ஷித் ராணா (1 விக்கெட்டு) ஆகியோரின் கட்டுக் கோப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 27 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட மிக மோசமான அளவில் தடுமாறி நின்றது. அலெக்ஸ் (19 ரன்கள்), ஸ்டார்க் (6 ரன்கள்) ஆகி யோர் களத்தில் இருந்தனர். சனிக்கிழமை தொடர்ந்து 2ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் உலகின் அதிவேக மைதானங் களில் ஒன்றான பெர்த்தில் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 17 விக்கெட்டு கள் அடுத்தடுத்து சரிந்தன. சாதாரண வேகப்பந்துவீச்சு கூட தாறுமாறாக எகி றியதால் ஒரே நாளில் 17 விக்கெட்டு கள் வீழ்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
72 ஆண்டுகளுக்குப் பின்...
1952ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலியா மண்ணில் நடை பெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதல்முறையாக 17 விக்கெட்டுகள் வீழ்த்தப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த 17 விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரி யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் 40 ரன்களை சேர்ப்ப தற்கும் 5 விக்கெட்டுகளை இழந்திருப்பது 2வது முறையாகும். இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இந்திய அணியிடம் தடுமாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல்
கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போல 2026, 2027ஆம் ஆண்டுகளுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதியும் அறிவித்துள்ளனர். ஐபிஎல் தொடர் 2025இல் மார்ச் 14 அன்றும், 2026இல் மார்ச் 15, 2027இல் மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
புரோ கபடி 2024
இரண்டு ஆட்டங்களும்: நொய்டா மைதானம், உத்தரப்பிரதேசம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஹாட் ஸ்டார் (ஒடிடி)
குஜராத் - தெலுங்கு டைட்டன்ஸ்
நேரம் : இரவு 8 மணி
ஜெய்ப்பூர் - ஹரியானா
நேரம் : இரவு 9 மணி