பெங்களூரு கர்நாடக மாநிலம் துமகுரு அருகே கோபாலபுரத்தில் 28 ஜூன் 2010 அன்று ஹொன்னம்மா (45) என்ற தலித் பெண் சாக்கடையில் சடல மாக மீட்கப்பட்டார். தலித் பெண்ணின் உடலில் 27 காயங்கள் இருந்தன. கோபா லபுரத்தில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவங்களை அம்பலப்படுத்தியதற் காக கோபாலபுர கிராம மக்கள் கற் களை வீசி தாக்குதல் நடத்தி ஹொன்ன ம்மா கொலை செய்யப்பட்டதாக விசார ணை மூலம் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 14 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஹொன்னம்மா கொலை வழக்கில் தும குரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “ஹொன்னம்மா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. விசார ணையின் பொழுதே 6 பேர் இறந்து விட்டனர். அதனால் தற்போது உயிரு டன் இருக்கும் 2 பெண்கள் உள்பட 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொ ருவரும் தலா 13,500 ரூபாய் அபராதத் தொகை கட்ட வேண்டும்” என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 14 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தலித் பெண் ஹொன்னம்மாவின் கொலை வழக்கில் உரிய நீதி வழங்கப்பட்டதற்கு தலித் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.