states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் என 10 பேர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டு களுக்கும் ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்டுகள் 10 பேர் உயிரிழந்ததாக ரிசர்வ் போலீஸ் படை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். எனினும் சுட்டுக்கொ ல்லப்பட்ட 10 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தால் சுக்மா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. 

நவ.26 இல் மிக கனமழைக்கு வாய்ப்பு 

சென்னை,நவ.22- தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலிருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 25ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம். செங்கல்பட்டு, விழுப்புரம் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கோவில் யானைகள் வனத்துறை  அனுமதியின்றி பயன்படுத்தப்படுகின்றன 

சென்னை, நவ.22- திருச்செந்தூர் கோவில் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்துறை அனுமதி யின்றி பயன்படுத்தப்படுவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயல கத்தில் நவம்பர் 22 வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அந்த  சாலையின் நடுவே சில இடங்களில் வனத்துறை நிலங்கள் வருவதால் சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. அப்பகுதிகளில் வனத்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். யானை, புலி உள்ளிட்ட வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. குடியிருப்பு பகுதி களுக்குள் யானைகள் வருவதை தடுக்க, வனத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயில் யானை ‘தெய்வானை’ தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த யானையை கோவிலில் வைக்க வனத்துறை அனுமதி இல்லை. அந்த யானை அசாமில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பி னும், அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனத்துறைக்கு உள்ளது. கோவில் யானைகளுக்கு அற நிலைய துறையிடம்தான் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து அந்த துறையிடம் பேசி வருகிறோம். கோயில் யானையை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில், யானையை சிறப்பு முகாமுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும். தமிழக அரசின் மலையேற்ற திட்டங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. இதில், சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிராகரிப்போம் மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த அரிட்டாபட்டி, உயிர் பன்முகத் தன்மை பகுதியாக திமுக ஆட்சி யில் ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுள்ளது. வெள்ளை வல்லூறு, ராஜாளி போன்ற பல பறவை இனங்கள் அங்கு உள்ளன. அது வனப் பகுதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம். இந்த நிலையில், அங்கு  டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.  தமிழக வனத்துறையிடம் ஒன்றிய அரசு அனுமதி கேட்கும்போது, அந்த  திட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்துவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

‘ஊட்டச்சத்து உறுதி செய்’ திட்டத்தால் இயல்பு நிலைக்கு திரும்பிய 77.3 சதவீத குழந்தைகள்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை,நவ.22- தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ’ஊட்டச்சத்து உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் துவக்க விழா சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள், இந்த திட்டத்தின் மூலம் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். உலக நாடுகளுக்கு முன்மாதிரியான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தாய் சேய் நல குறியீடு பின்தங்கிய குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் ஆயிரம் முதல் நன்னாட்களை கண்டறிந்து, அந்த குழந்தையின் நல்ல வளர்ச்சிக்காக தாய்மார்களுக்கு ரூ.5 ஆயிரம் தவணையாக கொடுக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் 19 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இருந்தன. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 27 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்துவது என்றால் அ.தி.மு.க ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்லாமல், ரூ.1018 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்

தொகுப்பூதிய முறையில் நியமனம்: அண்ணா பல்கலை. திரும்பப் பெற்றது 

சென்னை, நவ. 22- தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றது. இனிமேல் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை (நவ. 21) அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றது. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மட்டும் தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்ற மறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  எனினும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் அவுட்சோர்சிங் முறையில் எடுக்கக் கூடாது, முறையாக அறிவிப்பு வெளியிட்டு நிரந்தர பணியாளர்களாக எடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்: இன்று வாக்கு எண்ணிக்கை

புதுதில்லி, நவ. 22 - ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையிலுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகவும், மகா ராஷ்டிரா சட்டப்பேரவையி லுள்ள 288 இடங்களுக்கு நவம்பர் 20-ஆம் தேதி ஒரே  கட்டமாகவும் தேர்தல் நடை பெற்றது. அத்துடன், கேரளத்தின் வயநாடு, மகாராஷ்டிரத்தின் நான்டெட் ஆகிய 2 மக்கள வைத் தொகுதிகள் மற்றும் அசாம் (5), பீகார் (4), சத்தீஸ் கர் (1), குஜராத் (1), கர்நாடகம் (3), கேரளம் (2),  மத்தியப் பிரதேசம் (2), மேகாலயா  (1), பஞ்சாப் (4),  ராஜஸ்தான் (7), சிக்கிம் (2), உத்தரப்பிரதேசம் (9), உத்தரகண்ட் (1), மேற்குவங்கம் (6) என மொத்தம் 15 மாநிலங்களில் காலியாக இருக்கும் 48  சட்டப்பேரவை தொகுதி களுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது.  இந்நிலையில், இந்த தேர்தல்கள் அனைத்திலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23 அன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.