கொச்சி புற்றுநோய் ஆரா ய்ச்சி மையம் (சிசிஆர்சி) புற்றுநோய் துறையில் மேம்பட்ட ஆய்வு களுக்காக ராஜீவ் காந்தி பயோடெக்னா லஜி மையத்துடன் (ஆர்ஜிசிபி) ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, ஆர்ஜிசிபி ரூ.5.5 கோடி மதிப் பிலான உபகரணங்களை சிசிஆர்சி யிடம் வழங்கும். புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அதிநவீன வசதிகள் வழங்குவதை சிசிஆர்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. நுரையீரல் புற்றுநோய், வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகிய வற்றில் முதன்மையான கவனம் செலுத்தி புற்றுநோய் சிகிச்சையின் வளர்ச்சிக் கான திட்டங்கள் உருவாக்கப்படும். இதற்கான ஆராய்ச்சிகள் மரபணு காரணங்கள் மற்றும் நுண்ணுயிரி களுடன் தொடர்புடையவை. புற்றுநோய் சிகிச்சையின் முன்னேற்றத்திற்கான அடிப்படை வசதிகள் வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.