அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளி யுறவு, ஊழல் தடுப்புச் சட்டங்களை மீறியும், முதலீட்டாளர்கள் மற்றும் கடன் நிறு வனங்களை ஏமாற்றியும் அதானி குழுமம் ரூ. 6,300 கோடி (750 மில்லியன் டாலர்) அளவிற்கு மோசடியை அரங்கேற்றியிருப்பதாக அமெரிக்கா பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. மேலும் முதலீடுகளைப் பெறு வதற்காக அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரி களுக்கு ரூ. 2,029 கோடி (260 மில்லியன் டாலர்) அளவிற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இதுதொடர் பாக நியூயார்க் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அதானி குழுமம் தொடர்புடைய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்கப் பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் குற்றப்பத்திரி கையில் ஜெகன் மோகனுக்கு அதானி ரூ.1,750 கோடி லஞ்சம் அளிக்க ஒப்புதல் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக குற்றப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “சூரிய ஒளி மின்சார ஒப்பந்தம் பெற இந்தியாவிலேயே அதிக பட்சமாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வ ரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகனுக்கு ரூ.1,750 கோடி வரை அதானி லஞ்சம் அளிக்க ஒப்புதல் கொடுத்துள் ளார். அதாவது ஜெகன் மோகன் தன்னுடைய மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கினால் ரூ.1,750 கோடி தருவோம் என அதானி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத் தின் மூலம் மாநில அரசுக்கு ரூ.1.10 லட்சம் கோடி சுமை ஏற்படும். இது நஷ்டம் என்பது தெரிந்தும் ஜெகன் மோகன் தனக்கு பல கோடி ரூபாய் வரும் என்ற நோக்கத்தில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளார்
3 முறை சந்திப்பு...
ஜெகன் மோகன் முதல்வராக இருந்த போது தொழிலதிபர்களை சந்திப்பது வெளிப் படையான செய்தியாக இருந்தது. அதன் அடிப்ப டையில் அதானிக்கும், ஜெகன் மோகனுக்கும் சூரிய ஒளி மின்சாரம் ஒப்பந்தம் செய்வது தொடர்பாக மிகுந்த நெருக்கம் இருந்துள்ளது. இதற்காக தாடேப்பள்ளியில் உள்ள அரண்ம னையில் ஜெகன் மோகனை, அதானி 3 முறை ரகசியமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அவர்கள் நன்கொடை மற்றும் லஞ்ச பணம் குறித்து மறைமுக வார்த்தைகளால் பேசியுள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் வேக வேகமாக நிறைவேறி உள்ளது. ரூ.16,000 கோடி நிகர லாபம்... இந்திய சூரிய சக்தி நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கான முன் மொழிவு, அமைச்சர்களின் ஒப்புதல் மற்றும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியவை அனைத்தும் சில நாட்களிலேயே நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெகன் மோகனை அதானி சந்தித்து ரூ.1,750 கோடி வழங்குவது குறித்து விவாதித் துள்ளார். பின்னர் ஆந்திர அரசாங்கத்துடன் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் கையெழுத் தானது. இதன் மூலம் அதானி குழுமத்திற்கு 20 ஆண்டுகளில் ரூ.16,000 கோடி (200 கோடி டாலர்) நிகர லாபம் கிடைக்கும்.
அதானி கையில் கிருஷ்ணாபட்டினம் துறைமுகம்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதானியும் ஜெகன் மோகனும், அதிகளவில் ஆதாயம் அடை கிறார்கள். இந்தியாவில் மொத்தமாக அதானி நிறுவனம் ரூ. 2,200 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது என்றால் அதில் அதிகபட்சமாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு தான் ரூ.1,750 கோடியை வழங்கி உள்ளது. இந்த பணம் பரிமாற்றத்திற்கு பிறகு கிருஷ்ணா பட்டினம் துறைமுகத்தில் மாநில அரசின் பங்கை விற்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் ஜெகன் மோகன் - அதானி மோசடியின் நுட்பமான அம்சங்களை கூட அம்பலப்படுத்தி உள்ளன. லஞ்சம் கொடுப்பதற்காக யார் எப்போது எங்கே எப்படி சந்தித்தார்கள், அவர்களுக்கு இடையே என்ன மாதிரியான கடித பரிமாற்றம் நடந்தது என்பதை வெளிப்படுத்தி உள்ளனர். ஜெகன் மோகனுக்கும் சிக்கல் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.1,750 கோடி யை லஞ்சம் மற்றும் நன்கொடையாக பெறுவது மிகப்பெரிய குற்றத்தின் கீழ் கணக்கிடப்படு கிறது. இந்த வழக்கில் ஜெகன் மோகன் குற்ற வாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை மாநில அளவில் ஊழல் குற்றச்சாட்டுகளை சந்தித்து வரும் ஜெகன்மோகன் அமெரிக் காவிலும் விசாரணையை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப் பட்டால் கடுமையான தண்டனைக்கு வாய்ப்பு உள் ளது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.