games

img

விளையாட்டு...

பார்டர் - கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா - ஆஸ்திரேலிய அணி கள் மோதும் பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் கிரிக்கெட்  உலகின் மிக முக்கிய டெஸ்ட் தொடர் களில் ஒன்றாக உள்ளது.  உலகக்கோப்பை போட்டிகளை போன்று இரு அணிகளும் உக்கிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணி களுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் போன்று பார்டர் - கவாஸ்கர் டிராபி வரலாற்றுச் சிறப்பு மிக்க டெஸ்ட் தொடராக மாறியுள்ளது.  இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் ஆஸ்திரேலிய நாட்டில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் உலகின் அதிவேக மைதானங்களில் ஒன்றான பெர்த்தில் வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.  கம்பீர் - பாண்டிங் மோதலால் இடையே நடைபெறும் இந்த போட்டி மிக   பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா
இடம் : பெர்த், ஆஸ்திரேலியா
நேரம் : காலை 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஹாட் ஸ்டார் (ஒடிடி)

கேரள அரசின் அசத்தல் முயற்சி 14 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரும் மெஸ்ஸி  டாப் டிரெண்டிங்கில் அர்ஜெண்டினா - கேரளா

நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்  டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு (2025) கேரளாவில் நடை பெறும் சர்வதேசப் போட்டியில் விளை யாடுகிறது என்றும், இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் பங்கேற்பார் என கேரள மாநில விளையாட்டுத் துறை  அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித் துள்ளார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில், “இந்த சர்வதேச உயர்மட்ட  கால்பந்து போட்டியை நடத்துவதற் கான அனைத்து நிதி உதவியையும் கேரள மாநில வர்த்தகர்கள் வழங்கு வார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ஜெண்டினா அணி  நிர்வாகம் அறிவிக்கும். அடுத்த ஒன்ற ரை மாத காலத்தில் அர்ஜெண்டினா அணி நிர்வாக குழுவை சேர்ந்தவர் கள் கேரளா வர உள்ளனர். இது  தொடர்பாக கேரள அரசும், அர்ஜெண்டி னா அணி நிர்வாகமும் கூட்டு அறி விப்பை வெளியிட முடிவு செய்துள் ளோம். அர்ஜெண்டினா அணி கேரளா  வருவதில் எந்த மாற்றமும் இருக்காது. போட்டியை நடத்தும் தேதியை அர் ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு அறிவிக்கும். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா உடன் விளையாடும் எதிரணி மற்றும் போட்டி நடை பெறும் மைதானம் குறித்த அறிவிப்பு முடிவு செய்யப்படும். 50,000 பார்வை யாளர்கள் வரை அமரக்கூடிய மை தானத்தில் இந்தப் போட்டி நடை பெறும்” என அமைச்சர் அப்துரஹி மான் தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு... மெஸ்ஸி கடைசியாக 2011ஆம் ஆண்டு மேற்கு வங்க தலைநகர் கொல் கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வெனிசுலாவை எதிர்த்து விளையாடி னார். அந்தப் போட்டி கோலின்றி டிரா வில் முடிந்தது. அதன்பிறகு 14 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் மெஸ்ஸி இந்தி யாவில் விளையாடவுள்ளதை ரசிகர் கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். பாராட்டு மழையில் நனையும் பினராயி கேரள மாநிலத்தை ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசின் தீவிர முயற் சியால் மெஸ்ஸி இந்தியாவிற்கு மீண்டும் வரும் நிலையில், டுவிட்டர் எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைதளங் களில் அர்ஜெண்டினா - மெஸ்ஸி - கேரளா உள்ளிட்ட கலப்பு ஹேஸ்டேக் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. குறிப்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு விளையாட்டு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

சாம்பியன்ஸ் கோப்பையுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி...

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை மூன்றாவது முறை யாக இந்திய மகளிர் அணி வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி - சீனா மகளிர் அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி கோப்பையை கையில் ஏந்தியது.