பெர்த் டெஸ்ட் ஜெய்ஸ்வால், கோலி சதமடித்து கலக்கல் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்கு
5 போட்டிகளைக் (பார்டர் - கவாஸ்கர் டிராபி) கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆஸ்திரே லிய நாட்டின் பெர்த் நகரில் வெள்ளிக் கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கிய நிலையில், முதல் இன்னிங்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந் தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்ச மாக நிதிஷ் 41 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்ச மாக ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மிரட்டல் இந்திய அணியைப் போல ஆஸ்திரே லிய அணியும் பும்ரா பந்துவீச்சை சமா ளிக்க முடியாமல் மிக மோசமான அளவில் திணறிய நிலையில், முதல் இன்னிங்ஸில் 51.2 ஓவர்களில் 104 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்சல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜெய்ஸ்வால், கோலி கலக்கல் 46 ரன்கள் முன்னிலையுடன் இரண் டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங் கிய ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் பெர்த் மைதானத்தில் நங்கூரம் அமைத்து நிதான வேகத்தில் ரன் குவித்தனர். கே.எல். ராகுல் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். தேவ்தத் படிக்கல் (25 ரன் கள்) வந்த வேகத்தில் வெளியேற, ஜெய்ஸ் வால் 161 ரன்கள் (297 பந்துகள், 3 சிக்ஸர், 15 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். பண்ட் (1 ரன்கள்), ஜூரல் (1 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர் (29 ரன்கள்) பெரிய ளவு சோபிக்காத நிலையில், அனுபவ வீரர் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். கோலி சதமடித்தப் பின் இந்திய அணி இரண்டாவது இன் னிங்ஸை டிக்ளர் செய்தது. இந்திய அணி 134.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 534 ரன்கள் நிர்ண யம் செய்தது. கோலி (100 ரன்கள்) - நிதிஷ் (41 ரன்கள்) ஆகியோர் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்தி ரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா மீண்டும் திணறல் 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பும்ரா (2 விக்கெட் டுகள்) - சிராஜ் (1 விக்கெட்) மீண்டும் வேகத் தில் திணறியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4.2 ஓவர்களில் 12 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடு மாறி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இன் னும் இரண்டு நாட்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி யை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கள்கிழமை தொடர்ந்து 4ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
மட்டையால் பதிலடி கொடுத்த கோலி
2024 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி பார்ம் பிரச்சனையில் சிக்கி ரன் குவிக்க முடியாமல் மிக மோசமான அளவில் திணறினார். கோலியின் பார்ம் இல்லாத ஆட்டத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் விமர்சனம் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் பெர்த் டெஸ்டின் சதத்தின் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு கோலி மட்டையால் பதிலடி கொடுத்துள்ளார். விராட் கோலிக்கு இது 30ஆவது டெஸ்ட் சதம் ஆகும்.
ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம்
18ஆவது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் சவூதி அரேபிய நாட்டின் ஜெட்டா நகரில் ஞாயிறன்று தொடங்கியது. இந்த ஏல நிகழ்வில் இந்திய அணியின் அதிரடி வீரரும், கொல்கத்தா அணியின் கேப்டனுமான ஸ்ரேயாஸை பஞ்சாப் அணி ரூ.26.75 கோடிக்கு வாங்கியது. இந்திய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷதீப் சிங்கை ரூ.18 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி. தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளரான ரபடாவை ரூ.10.75 கோடி க்கு வாங்கியது குஜராத். இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு வாங்கியது குஜராத் அணி. அதே போல இந்திய அணியின் அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு வாங்கியது லக்னோ அணி.