games

img

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

309   பந்துகள், 51 பவுண்டரிகள், 3 சிக்சர்கள். 297 ரன்கள் குவிப்பு. 17 வயதில் அதிரடி யாக விளையாடி தந்தையைப் போல்  அசத்தியிருக்கிறார் ஆர்யவிர் சேவாக். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான (பிசிசிஐ) 19 வயதுக்குட் பட்ட இளம் வீரர்களுக்கான கூச் பிஹார்  டிராபி டெஸ்ட் தொடரை (நான்கு நாட்கள்) நடத்தி வருகிறது. இந்தத் தொ டரில் தில்லி அணிக்காக விளையாடி னார் இந்தியாவின் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக்கின் இளைய மகன் ஆர்விர். மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் தந்தையைப் போன்று துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி, எதிரணியின் பந்து வீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்த ஆர்யவிர், இரட்டைச் சதத்தை கடந்தார். இவரை  ஆட்டம் இழக்க மேகாலயா பந்துவீச்சா ளர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. தந்தை வீரேந்திர சேவாக்கை போலவே, பந்தை நாலாபுறமும் சிதறடித்து  வேகமாக நூறு ரன்களை கடந்தார். மேலும் விஸ்வரூபம் எடுத்த அவர் இரட்டை சதத்தை யும் கடந்து 297 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து முச்சதம் அடிக்கும் வாய்ப்பை இழந் தார். ஆர்யவிர் அதிரடி ஆட்டத் தால் தில்லி வேக மாக 600 ரன்களை குவித்தது. சர்வதேச கிரிக் கெட் அரங்கில் இரண்டு முறை முச்சதம் விளாசிய  ஒரே இந்திய வீரர் சேவாக்.அவரது மகன், தந்தையை  போலவே தொடக்க வீரராக களம்  இறங்கி அதிரடியாக விளையாடி யிருக்கும் ஆர்விருக்கு சமூக வலை தளங்களில் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள். “சிறப்பாக விளையாடினாய். இந்த  நெருப்பை அணையாது வைத்திரு.  அப்பாவின் பெரிய சதங்கள், இரட்டை,  முச்சதங்கள் அனைத்தையும் அடிப்பாய்” என்று தனது இளைய மக னுக்கு வீரேந்திர சேவாக் பெருமிதத் தோடு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நாளைய இலக்கு எப்பொழுதும் இன்றைய சாதனையை விட உயர்ந்த தாக இருக்க வேண்டும்.