சர்வதேச போட்டிகளில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நடால்
டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரரும், அதிரடி மற்றும் போராட்ட குணமிக்க வீரரு மான ரபேல் நடால் சர்வதேச போட்டி களில் இருந்து புதன்கிழமை கண்ணீருடன் ஓய்வு பெற்றார். ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா பகுதியில் 1986இல் பிறந்த ரபேல் நடால், 2001இல் சர்வதேச டென் னிஸ் உலகில் காலடி வைத்தார். 2ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, 2003இல் சர்வதேச டென்னிஸில் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தை பெற்றார். 2004இல் டேவிஸ் கோப்பை சாம்பியன் பட்டத் தோடு, 2005இல் டென்னிஸ் உலகின் மிக உயரிய பட்டமான கிராண்ட்ஸ்லாம் (பிரெஞ்சு ஒபன்) பட்டத்தை வென்று அசத்தினார். அதன்பிறகு ரபேல் நடாலுக்கு ஏறுமுகம் தான். வருடந்தோறும் கிராண்ட்ஸ் லாம் பட்டங்கள், ஒலிம்பிக் பதக்கம், டேவிஸ் கோப்பை, ஏடிபி கோப்பை என 2022 வரை 21 ஆண்டுகள் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக நடால் திகழ்ந்தார். அதன்பிறகு கணுக்கால் காயம், இடுப்பு வலி மற்றும் உடல்நலன் சார்ந்த பிரச்ச னைகளால் ஓய்வில் இருந்த ரபேல் நடால், மீண்டும் 2023இல் களமிறங்கினாலும் முன்பு போல சரிவர விளையாட முடியாமல் திணறி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் டேவிஸ் கோப்பை தொடரோடு ஓய்வு பெறப்போவதாக நடால் அறிவித்தார். அதன்படி டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி களமிறங்கியது. இந்த டேவிஸ் கோப்பையுடன் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்ததால், தெற்கு ஸ்பெயினில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் ரசிகர்கள் அதிகளவில் குவிந்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப் பட்ட போதே ரபேல் நடால் உணர்ச்சிப் பெருக்கு டன் காணப்பட்டார். பின்னர் 38 வயதான நடால், நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கினார். இந்தப் போட்டியில் 4-1 என்று பின் தங்கிய நடால், பின்னர் ஆட்டத்தில் 4-3 என்று வேகமாக முன்னேறி வந்தார். எனினும் முதல் செட்டை 6-4 என்றும், 2ஆவது செட்டை 6-4 என்ற கணக்கிலும் இழந்து தோல்வியை தழுவினார். தனது டென்னிஸ் வாழ்க்கையின் முதல் போட்டியில் தோல்வி கண்டது போல தனது கடைசி டென்னிஸ் போட்டியிலும் தோல்வியுடன் ரபேல் நடால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். போட்டி முடிந்த பின்பு மைதா னத்தை (பிட்ச்) விட்டு வெளியே ரசிகர்கள் ரபா... ரபா... (செல்லப் பெயர்) என முழங்கி பிரியாவிடை அளித்தனர். ரசிகர்களின் ஆரவாரத்தைகண்டு ரபேல் நடால் கண்ணீர்விட்டு கதறி அழுதார். அதன்பிறகு மைதானத்தில் நடை பெற்ற சிறப்பு நிகழ்ச்சி நிறைவுப்பெற்றப் பின் ரபேல் நடால் இருகைகளை உயர்த்தி, “நான் டென்னிஸ் களத்தை விட்டுச்செல்கிறேன்” எனக் கூறி 23 ஆண்டுகால சர்வதேச டென்னிஸ் உலகில் இருந்து விடைபெற்றார்.
நடாலும்... பட்டங்களும்...
கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் - 22
(ஆஸ்திரேலியா - 2, பிரெஞ்சு - 14,
விம்பிள்டன் - 2, அமெரிக்கா - 4)
ஒலிம்பிக் தங்கம் - 2
(பெய்ஜிங் (2008) - ரியோ டி ஜெனிரோ (2016))
டேவிஸ் கோப்பை - 4
(2004 , 2009 , 2011 , 2019)
வெர்ல்டு டூர் பைனல்ஸ் - 2 (2010 , 2013)
ஏடிபி பட்டங்கள் - 92 (அனைத்தும் சேர்த்து)
மொத்த பரிசுத்தொகை - ரூ. 1,138 கோடி
நடாலின் சிறப்பு திறன்
இடதுகை பழக்கமுள்ள ஆட்டகாரரான ரபேல் நடால் லெக், ஆப் இரண்டு திசைகளிலும் ஒரே வேகத்தில் திசை திருப்பக் கூடியவர். அதே போல சர்வீஸ் போலவே ரிவர்ஸ் ஷாட்களையும் ஒரே வேகத்தில் திசை திருப்பும் திறன் படைத்தவர். மற்ற வீரர்கள் சத்துமிக்க பானம், ஜெல்லி வகைகளை சாப்பிட்டு விளையாடினாலும், நடால் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு 5 மணிநேரமும் சளைக்காமல் விளை யாடும் திறன் கொண்டவர். எளிதில் விட்டுக்கொடுக்காமல் கடைசி வரை போராடும் திறன்மிக்க நடால், யாரிடமும் தேவையில்லாமல் மோதலுக்குச் செல்ல மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.