tamilnadu

img

சிபிஎம் கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு: மாவட்டச் செயலாளராக சி. சுரேஷ் தேர்வு

கிருஷ்ணகிரி, நவ. 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட 24-ஆவது மாநாடு  நவம்பர் 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. புதிய மாவட்டக்குழு இதில், புதனன்று நடை பெற்ற மாநாட்டில், 29 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்டக்குழுச் செயலாள ராக சி. சுரேஷ் தேர்வு செய் யப்பட்டார். ஜி.கே. நஞ்சுண் டன், ஆர். சேகர், சி. பிரகாஷ்,  எஸ். ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, கே. மகாலிங்கம், சி.பி. ஜெயராமன், லெனின் முருகன், ஆர். நடராஜன் ஆகியோர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். தீர்மானங்கள் காவிரி வனவிலங்கு சர ணாலயம் எனக் கூறி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி தேன்கனிக் கோட்டை வட்டத்திலும் தர்ம புரி மாவட்டத்தில் பாலக் கோடு வட்டத்திலும் 165  கிராம மக்களை வெளி யேற்றி வருவதற்கு கண்ட னம் தெரிவிக்கப்பட்டது. பல தலைமுறைகளாக வாழும் மக்களின் அடிப் படை உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய மோடி அரசு கைவிட வேண்டும், சுமார் 25 ஆயி ரம் மலைவாழ், பழங்குடி தலித் மக்களின் வீடு களுக்கு பட்டாக்கள் வழங்க வேண்டும், 30 ஆண்டு களுக்கு முன்பு பட்டியலின மக்களுக்கு அரசு கட்டிக் கொடுத்த, தற்போது பாழ டைந்துள்ள சுமார் 3 ஆயி ரம் தொகுப்பு வீடுகளை உடனடியாக சீர்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வசிங், டி. ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லிபாபு ஆகியோர் பங்கேற்றனர்.