சென்னை, நவ. 20 - வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர் களுடன் சேர்த்து 14 இந்திய மீன வர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற போது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள னர். இந்நிலையில், கைது செய்யப் பட்டுள்ள மீனவர்களையும், அவர் களது மீன்பிடி இயந்திரப் படகுகளை யும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். 14 இந்திய மீனவர்கள் (7 மீனவர் கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்) குஜ ராத்தின் போர் பந்தரில் இருந்து IND-GJ-25-MM-3458 மற் றும் IND-GJ-25-MM-1582 என்ற பதிவெண்கள் கொண்ட இயந் திரப் படகு களில் மீன் பிடிக்கச் சென்றபோது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலை யில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்ப தற்கான முயற்சிகள் குறித்தோ எவ்விதத் தகவலும் இல்லை. மேலும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சய மற்ற தன்மை நிலவுகிறது என்றும் பொருளீட்டும் மீனவர்கள் இல்லாத தால் அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேத னையுடன் உள்ளனர். பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலை யில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடி யாக மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.