tamilnadu

img

மருத்துவ மாணவர்களின் பணிக்காலம் குறைப்பு!

சென்னை,நவம்பர்21- பயிற்சி மருத்துவர்களின் 2 ஆண்டு கட்டாய பணிக்கலத்தை ஒரு ஆண்டாகக் குறைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
எம்.டி, எம்.எஸ் போன்ற மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணிபுரியும் காலத்தை 2 ஆண்டுகளிலிருந்து ஒரு ஆண்டாகக் குறைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2 ஆண்டுகள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறை தளர்த்த வேண்டுமென்று ஏற்கனவே அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு பயிற்சி மருத்துவர்களின் பணிக்காலத்தை ஒரு ஆண்டாக குறைத்துள்ளது.