tamilnadu

img

தொழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டம் வெற்றி

சென்னை, ஜன. 27 - காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் ‘சாம்சங் இந்தியா’ நிறு வனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறு வனத்துக்கு இந்தியாவில் நொய்டா விலும் காஞ்சிபுரத்திலும் ஆலைகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள ‘சாம்சங் இந்தியா’ நிறுவனத்தில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். வாஷிங் மெஷின், குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ‘சாம்சங் இந்தியா’ நிறு வனம் தயாரித்து வருகிறது.  சாம்சங் ஊழியர் போராட்டம் இந்நிலையில், கடந்த 2024 ஜூலை யில், இந்நிறுவனத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) தலைமை யிலான தொழிலாளர் சங்கத்தை  தொடங்குவதற்கு தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இதற்கு ‘சாம்சங் இந்தியா’ நிர்வாகம் எதிர்ப்பு அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராடி வந்தனர். கடந்த செப்டம்பர் 9 அன்று  தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது.  பேச்சுவார்த்தை ஊழியர்களின் போராட்டத்தை முடி வுக்குக் கொண்டு வருவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத் துறையானது, ‘சாம்சங் இந்தியா’ நிறு வனம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.

‘சங்கம்’ என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு

சாம்சங் இந்தியா நிறுவனம் தொடர்பாக நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டன. இதில், இரண்டு வழக்குகளை ‘சாம்சங் இந்தியா’ நிறுவனமே தொடர்ந்தது. ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலும் மற்றொரு வழக்கை காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்திலும் தொடர்ந்தது.  அதேநேரத்தில் தொழிற்சங்க பதிவு தொடர்பாக, சிஐடியு தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. “முதல் இரண்டு வழக்குகளில் ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்’தை எதிர்த்தரப்பாக சாம்சங் நிர்வாகம் குறிப்பிட்டது. சிஐடியு வழக்கிலும் ‘சங்கம்’ என்றே கூறியது. ஆனால், பேச்சுவார்த்தையின் போது மட்டும் ‘சங்கம்’ என்ற வார்த்தையை ஏற்கவே மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருந்தது”  இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட முயற்சியால் தோழமைக் கட்சித்  தலைவர்கள் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த னர். நேரிலும் சென்று தொழிலாளர் களை சந்தித்து போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வருவதாக உத்தர வாதம் கொடுத்தனர். அதன்படி, முத லமைச்சர் தலையிட்டு இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. தொழிலாளர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு பணிக்கு திரும்பினர். நீதிமன்ற வழக்கும்-உத்தரவும் அதேநேரம் தொழிற்சங்கப் பதி வுக்கான சட்டப் போராட்டம் தொடர்ந்தது. சிஐடியு தரப்பில் உயர்  நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், சிவக்குமார் ஆகியோர் வாதிட்டனர். இதனடிப்படையில், நான்குவார காலத்திற்குள், சங்கத்தை பதிவு செய்தற்கான முறையீட்டு மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2024 டிசம்பர் 5 அன்று   நீதிபதி கூறினார். தமிழக அரசு 6  வாரம் கால அவகாசம் கேட்ட நிலை யில், நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அதன்படி, இந்த உத்தரவு ஆன்லைன் மூலம் வெளியான 2024 அன்று டிசம்பர் 17 துவங்கி, 6 வார அவகாசம் முடிவடையும் கடைசி நாளான 27.1.2025 அன்று தொழிற்சங்க பதிவாளர் தற்போது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு  செய்து கொடுத்திருக்கிறார். 

பதிவானது சங்கம்

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை முறைப்படி பதிவு செய்யப் பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஜனவரி 27 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலு வலகத்தில் ‘சாம்சங் இந்தியா தொழி லாளர்கள் சங்கத்’தின் பதிவுச் சான்றிதழ், தொழிற்சங்க பதிவு அலு வலரிடமிருந்து சங்கத்தின் தலைவர் இ.முத்துக்குமார் பெற்றுக்கொண்டார்.

வெற்றி கொண்டாட்டம்

இது சாம்சங் தொழிலாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்ட தாக அரசு அறிவித்த செய்தி கிடைத்த தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.நேரு தலைமையில் காஞ்சிபுரம் சிஐடியு அலுவலகம் முன்பு திரண்ட தொழி லாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும், தங்களின் போராட்ட வெற்றியைக் கொண்டாடி னர். அதேபோல், சுங்குவார் சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிலாளர்களும் தங்களின் இந்த வெற்றியை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.