கடலூர்,ஜனவரி.29-மருங்கூர் அகழாய்வில் இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், , 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மருங்கூர் அகழாய்வில், ராஜராஜ சோழன் காலத்துச் செம்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூது பவளம், கண்ணாடி மணிகள், ரெளலட்டட் பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளதன.