சென்னை, ஜன. 28 - தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை யில் உள்ள 47 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணி யிடங்களாக மாற்ற அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப் பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களுக்கு இந்த அர சாணை பொருந்தும். மேலும் 5,418 பணியிடங்களை, அதில் வேலை செய்பவர்களின் ஓய்வுக்குப் பிறகு ஒழி வடையும் பணியிடங்களாக அறிவித்து, அதேநேரம் அவை தற்காலிக பணியிடங்களாக தொடரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.