விழுப்புரம், ஜன. 27 - விவசாயத்தை சந்தைப்படுத்துதல் தொடர்பான தேசியக் கொள்கையை திரும்பப் பெறுமாறு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி, ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் டிராக்டர் மற்றும் இரு சக்கர பேரணி நடைபெற்றது. இதனொரு பகுதியாக தமிழ்நாட்டி லும் பல்வேறு மாவட்டங்களில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் விழுப்புரத்தில் நடைபெற்ற பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் துவக்கி வைத்துப் பங்கேற்றார். விவசாய விளைப்பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்திட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும், அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் அனுமதியில்லாமல் விளைநிலங்களை வளர்ச்சித் திட்டங்களுக்கு கையகப்படுத்து வதை கைவிட வேண்டும்; விவசாயி களுக்கும், கூட்டாட்சிக்கும் எதிராக உள்ள விவசாயத்தை சந்தைப்படுத்து தல் தொடர்பான கொள்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விழுப்புரத்தில் நடை பெற்ற பேரணிக்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணியின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆர். கலியமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ ஆர். ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் தொடங்கிய பேரணி, திருச்சி சாலை, மாவட்ட ஆட்சியர், புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்று நகராட்சித் திடலில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டி. ரவீந்திரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநி லத் தலைவர் சு. வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி. ஸ்டா லின், மாவட்டச் செயலாளர் ஆர்.டி. முருகன், மாவட்டத் தலைவர் ஆர். தாண்டவராயன், தமிழ் மாநில விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சகாபுதீன், மக்கள் அதிகாரம் அம்பேத்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் பெ. சண்முகம் சாடல்
கொல்லைப்புற வழியாக போர் தொடுக்கும் பாஜக!
டிராக்டர் போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், “விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த மூன்று கருப்பு சட்டங்களையும் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தால், ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற்றது; ஆனால், அந்த சட்டங்களை தற்போது தேசியக்கொள்கை என்ற வடிவில், கொல்லைப்புற வழியாக மீண்டும் கொண்டு வருகிறது” என குற்றம் சாட்டினார். “இவ்வாறு விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்துத்தான், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு முழுமைக்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான டிராக்டர் மற்றும் விவசாயிகள் பேரணியை நடத்துகிறோம்” என்றார். “வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துகிறோம் என்ற போர்வையில், புதிய கொள்கையை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. இந்த கொள்கை அமலுக்கு வந்தால் கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்வது இல்லாமல் போய்விடும்” என்று எச்சரிக்கை செய்தார்.