சென்னை எழும்பூரில் மாசிலா- விஜயா அறக்கட்டளை சார்பில் ஜனநாயக பாதுகாவலர் விருது மற்றும் விருதுக்கான தொகை ரூ.50 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதிக்கு வழங்கி கௌரவித்தது. இந்த விருது தொகை ரூ.50ஆயிரத்தை, மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதிக்கு வழங்குவதாக பாலபாரதி அறிவித்து இதனை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் புதனன்று வழங்கினார். இந்நிகழ்வின்போது, கட்சியின் தருமபுரி மாவட்டச்செயலாளர் அ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.