உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்திடம் இருந்து ‘பயங்கரவாத புல்டோசர்’ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஜார்க்கண்ட் மக்கள் தங்களது தகுந்த பதிலை அளிப்பார்கள். ஜார்க்கண்டில் பாஜகவின் இரட்டை இயந்திர ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
உத்தரப்பிரதேசம் மீராபூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்கும் மக்களை திட்டமிட்டு அம்மாநில காவல்துறை தடுத்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் வரை உத்தரப்பிரதேசத்தில் எந்த தேர்தலும் நேர்மையான முறையில் நடத்த முடியாது. அதற்கு வாய்ப்பும் இல்லை.
ஒன்றிய அரசின் செயல்பாட்டை உற்றுநோக்கும் பொழுது பிரதமர் மோடி மணிப்பூரை மறந்துவிட்டார் எனத் தெரிகிறது. உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் மோடி அருகில் உள்ள மணிப்பூருக்குச் செல்ல மறுப்பது பெரிய புதிராக உள்ளது. மணிப்பூர் பாஜக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணருகின்றனர்.