புதுதில்லி,நவம்பர்.21- அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தனது குழுமத்தின் பங்குகளில் 10% மேல் சரிவை சந்தித்து வருகின்றன.
சோலார் ஆற்றல் திட்டங்கள் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்தது மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்ற முயன்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு.
அதானி குழுமத்தின் மீதான லஞ்சம் மற்றும் மோசடி புகாரில் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனையடுத்த ஒரு மணி நேரத்திலேயே ரூ.2 லட்சம் கோடி மதிப்புடைய பங்குகளை அதானி குழுமம் இழந்துள்ளது.