கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு விருது
பிரபல வானொலி நிறுவன மான ஹலோ எப்.எம் (Hello FM - 106.4) பல்வேறு துறைகளில் சாத னை படைக்கும் பெண்களைக் கவு ரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் விளையாட்டில் தடம் பதித்ததற்காக தமிழ்நாடு இளம் கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனைக் கான “ஹலோ எப்.எம்” விருது வழங்கப்பட்டது. சென்னை கண்ணகி நகரில் மிக வும் எளிமையான குடும்பப் பின்னணி யில் இருந்து வந்து, தடைகளைத் தாண்டி கபடி விளையாட்டில் மாநில, தேசிய, சர்வதேச அளவிலும் பல்வேறு சாதனை படைத்ததை பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. முன்னதாக, சமீபத்தில் தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப் வழங்கும் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கார்த்திகாவை அழைத்து, அரசு சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் காற்று மாசு காரணமாக வெளியேறிய டென்மார்க் வீரர்
தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத் தில் இந்திய ஓபன் சர்வதேச பேட் மிண்டன் (ரூ. 8 கோடி பரிசுத்தொகை) தொடர் செவ்வாய்க்கிழமை தொடங் கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பேட் மிண்டன் உலகின் முன்னணி வீரர் - வீரங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், 4 முறை பேட்மிண் டன் உலக சாம்பி யனான டென் மார்க் வீரர் ஆண்ட ர்ஸ் அண்டோன் சன், தில்லி காற்று மாசுவின் காரணமாக இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அவர் கூறுகையில், “இந்திய ஓபன் சர்வதேச பேட் மிண்டன் தொடரில் இருந்து விலகிய தற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளேன். இது ஒரு பேட்மிண்டன் போட்டி நடத்துவதற்கு தகுதியான இடம் அல்ல” என ஆண்ட ர்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.
தில்லி மக்களின் நிலைமை எப்படி இருக்கும்?
தில்லியில் இந்திய பேட்மிண்டன் தொடர் 5 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. தொடரில் பங்கேற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர் - வீராங்கனைகள் ஹோட்டல், பயிற்சி பெறும் இடம், போட்டி நடைபெறும் உள்ளரங்கு இடங்களில் மட்டுமே வலம் வருகின்றனர். வெளியிடங்களுக்கு அவர்கள் தேவைக்கு ஏற்ப மட்டுமே செல்ல முடியும். அதாவது வெளியே செல்ல கட்டாயம் எதுவும் கிடையாது. ஆனாலும் கூட தில்லியில் நிலவும் காற்று மாசுவின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் டென்மார்க் வீரர் அபராதம் செலுத்தி தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அப்படி என்றால் தில்லி மக்களின் நிலைமை எப்படி இருக்கும்? என கேள்விகள் கிளம்பியுள்ளன.
ஒருநாள் தரவரிசை : கோலி முதலிடம்
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) சார்பில் ஒருநாள், டி-20, டெஸ்ட் தொடருக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்கான ஐசிசி ஒருநாள் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தரவரிசைப் பட்டியலில், நியூஸி லாந்து அணிக்கெதிரான முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி 93 ரன்கள் விளாசிய விராட் கோலி (785 புள்ளிகள்), 4 ஆண்டுகளுக்கு பின் முதலிடம் பிடித்தார். ரோகித் சர்மா ( 775 புள்ளிகள் - 3 ஆவது இடம்), சப்மன் கில் (725 புள்ளிகள் - 5ஆவது இடம்), ஸ்ரேயாஸ் ஐயர் (682 புள்ளிகள் - 10ஆவது இடம்) ஆகியோரும் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.