games

img

விளையாட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் கவலைக்கிடம்

1990 முதல் 2000 வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான டேமியன் மார்ட்டின் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் மூளைக் காய்ச்சல் (Brain Fever) நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.  தற்போதைய நிலையில் மார்ட்டினின் உடல்நிலை கோமாவில் (Comatose state)  உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால்,  மருத்துவக் குழுவினர் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் எப்போது சுயநினைவுக்கு திரும்புவார் என்பது குறித்து மருத்துவமனை தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான விரிவான அறிக்கை வெளியாகவில்லை.

டிக்கெட் விற்பனையில் கொள்ளையடிக்கும் பிபா ஒரு போட்டிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கிறது

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டாக அடுத்தாண்டு (2026) நடைபெறுகிறது. இந்த தொடருக்கான டிக்கெட் விலை கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு போட்டியின் டிக்கெட் விலை இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்திற்கு (1000 டாலருக்கு மேல்) மேல் உள்ளது. இந்த அடாவடி விலை உயர்வுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ டிக்கெட் விலை உயர்வை நியாயப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”விற்பனைக்கு இன்னும் 60 லட்சம் டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. ஆனால் 15 நாட்களில் 15 கோடி ரசிகர்கள் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதாவது தினமும் 1 கோடி விண்ணப்பங்கள் வருகின்றன. இது கால்பந்து  உலகக்கோப்பையின் வலிமையைக் காட்டுகிறது. டிக்கெட் விலை உயர்வு என்றாலும், அதில் கிடைக்கும் வருவாய்  மீண்டும் உலகெங்கிலும் கால்பந்து விளையாட்டுக்கே பயன்படுத்தப்படுகிறது. பிபா இல்லையென்றால் உலகின் 150 நாடுகளில் கால்பந்தே இருக்காது.  உலகக்கோப்பை மூலம் ஈட்டும் வருவாயை நாங்கள் மீண்டும் முதலீடு செய்வதால் தான் கால்பந்து உயிர்ப்புடன் உள்ளது” என ஜியானி கூறினார். அதாவது  டிக்கெட் விலையை உயர்த்தியது சரி தான். அதில் கிடைக்கும் வருவாய் மூலம் தான் கால்பந்து பிழைக்கிறது. அதனால் டிக்கெட் விலையை குறைக்க வாய்ப்பில்லை என்று ஜியானி இன்பான்டினோ கூறியுள்ளார்.

தேவையை பொறுத்து விலையை உயர்த்தும்

அடாவடி திட்டம் டிக்கெட் விலை தொடர்பான அறிவிப்பு ஒன்றும், தற்போதைய விற்பனை நிலை ஒன்றுமாக உள்ளது. அதாவது அறிவிப்பின் போது டிக்கெட் விலை 5% என்று எடுத்துக்கொண்டால், தேவை மற்றும் கோரிக்கை அதிகமாக இருந்தால் டிக்கெட் விலை 50% உயர்த்தப்படுகிறது. இன்னும் உலகக்கோப்பைக்கு 6 மாதங்கள் (ஜூன் 11 –  ஜூலை 19) உள்ள நிலையில், டிக்கெட் விலை 500% கூட உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஹோல்டர் புதிய சாதனை

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், டி-20 கிரிக்கெட்டில் முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.  34 வயதான ஹோல்டர் 2025ஆம் ஆண்டில் 6 கிரிக்கெட் அணிகளுக்காக 69 டி-20 போட்டிகளில் விளையாடி, 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த 6  அணிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் தேசிய அணியும் அடங்கும். மற்ற அணிகள் ஐபிஎல் போன்ற உள்ளூர் அணிகள் ஆகும். இதன் மூலம் 2018 ஆம் ஆண்டு ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்) 61 டி-20 போட்டிகளில் எடுத்த 96 விக்கெட்டுகள் சாதனையை புறந்தள்ளி புதிய சாதனை படைத்துள்ளார் ஹோல்டர்.