games

img

விளையாட்டு

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் மீண்டும் விதிமீறலில் கார்ல்சன்

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9ஆவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே) - இந்தியாவின் முன்னணி வீரர் அர்ஜுன் எரிகைசி மோதினர்.  இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்றது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இரு வீரர் களுக்கும் மிகக் குறைந்த கால அளவே இருந்தது. இந்த பதற்றமான சூழலில், கார்ல்சன் தனது ராணி காயை நகர்த்தும் போது தவறுதலாகக் கீழே நழுவவிட்டார். அது சற்றுத் தள்ளி கீழே விழுந்தது. நிலைதடுமாறிய கார்ல்சன், குறித்த நேரத்திற்குள் காய்களை நகர்த்த முடியாமல் நேர நெருக்கடியால் தோல்வியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், செஸ் மேஜையை பலமாக ஓங்கி அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 3ஆவது முறை கார்ல்சன் இவ்வாறு விதிமீறலில் ஈடுபடுவது முதல்முறையல்ல. இந்தாண்டு நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் குகேஷுக்கு எதிரான கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்சன் தோல்வியடைந்த போது மேஜையைத் தட்டியும், ஆத்திரத்துடன் மேடையை விட்டு வெளியேறியும் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். மேலும் ரஷ்ய வீரர் விளாடிஸ்லாவ் ஆர்டெமிவிடம் தோற்றபோது, கார்ல்சன் தனது கோட்டை (Blazer) வேகமாக இழுத்துக்கொண்டு, அருகில் வந்த கேமராவைத் தள்ளிவிட்டுச் சென்றார்.

தேசிய சீனியர் பேட்மிண்டன்  : தமிழ்நாடு வீரர் ரித்விக் சாம்பியன்

ஆந்திர மாநிலம் விஜயவாடா வில் நடைபெற்ற தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், 22 வயதான தமிழ்நாடு வீரர் ரித்விக் சஞ்சீவி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில், தரவரிசையில் இல்லாத ரித்விக், பாரத் ராகவை 21-16, 22-20 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். ரித்விக்கிற்கு இது முதல் தேசிய ஆடவர் ஒற்றையர் பட்டம் ஆகும். குறிப்பாக தேசிய சீனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் தமிழ்நாடு வீரர் என்ற பெருமையையும் ரித்விக் பெற்றுள்ளார். இதுகுறித்து பேசிய ரித்விக், “நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள் ளேன். என் குடும்பத்தினர், பயிற்சி யாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி யாக உள்ளனர்.  இது 17 வயதுக்குட்பட்ட பட்டம் வென்ற பிறகு நான் பெற்ற முதல் சீனியர் தேசியப் பட்டம் ஆகும்.  அரையிறுதியில் முதல் நிலை வீரரான  கேரளாவின் கிரண்ஜார்ஜை வென்றது என் வாழ்க்கையின் சிறந்த வெற்றிகளில் ஒன்று” என அவர் பெருமிதமாககூறினார்.