இன்று மாலை இரண்டாவது முறையாக தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.560 குறைந்து ரூ.99,840க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,480க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.257-க்கும், கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.2,57,000-க்கும் விற்பனையாகிறது.
