ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உண்ணாநிலை போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் பா.வேலு தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி போராட்டத்தை துவக்கி வைத்தும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா.பிரபு நிறைவு செய்தும் பேசினர். மாவட்ட செயலாளர் பா.செல்வகுமார். மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் கண்ணன், பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் பேசினர்.
