காவேரிப்பாக்கத்தில் கால்வாய் கடும் சேதம்! தொற்று நோய் அச்சத்தில் பொதுமக்கள்
ராணிப்பேட்டை,டிச.30– காவேரிப்பாக்கத்தில் இருந்து பாணாவரம் மற்றும் சோளிங்கர் செல்லும் முக்கிய வழி கோட்டை தெரு பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் முறை யான பராமரிப்பின்றி தற்போது முற்றிலும் சிதில மடைந்து உள்ளது. இத னால் கழிவுநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்று கடும் துர்நாற்றம் ஏற்படுத்துகிறது. பல பத்தாண்டுகளாக இந்தக் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவோ அல்லது புனரமைக்கப் படவோ இல்லை. மழைக் காலங்களில் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுவ தால் பொதுமக்கள், முதிய வர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், இக்கால்வாய் அருகே குடிநீர் குழாய்கள் செல்வதால், கழிவுநீர் கசிந்து குடிநீருடன் கலக்கும் அபாயம், அதன் மூலம் டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சிதிலமடைந்த பழைய கால்வாயை அகற்றிவிட்டு, நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிமெண்ட் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
