காட்டுப்பன்றித் தொல்லையால் பயிர்கள் நாசம் ! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு, டிச.30- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி. சினேகா தலைமையில் செவ்வாயன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து விவ சாயிகள் கவலை தெரிவித்தனர். விவசாய நிலங்களுக்குள் புகும் காட்டுப்பன்றிகள், குறிப்பாகக் கரும்புச் சாகுபடியை அடியோடு நாசம் செய்வதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுவ தாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், குறைந்த மின்னழுத்தப் பிரச்சனை யால் மின் மோட்டார்கள் பழுதடைவது, ஏரி நீர்வரத்துக் கால்வாய்களைச் சீர மைக்க வேண்டிய அவசியம் மற்றும் சாலைகளில் திரியும் மாடுகளால் ஏற்படும் இடையூறுகள் குறித்து 120-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆட்சியரின் நடவடிக்கை: விவ சாயிகளின் கோரிக்கைகள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தர விட்டார். மேலும், மாவட்டத்திலுள்ள வேளாண் மையங்களில் தேவையான அளவு விதை, உரம் மற்றும் பூச்சி மருந்து கள் இருப்பதை உறுதி செய்யுமாறு அதி காரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் கணேஷ் குமார், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
