tamilnadu

img

விவசாயிகள் சங்கத் தலைவர் துளசிநாராயணன் இளைய சகோதரர் விஜயசாரதி காலமானார்

விவசாயிகள் சங்கத் தலைவர் துளசிநாராயணன் இளைய சகோதரர் விஜயசாரதி காலமானார்

திருவள்ளூர், டிச 31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன் இளைய சகோதரர் பி.விஜயசாரதி (வயது.50) செவ்வாயன்று (டிச.30), மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு சிபிஎம் திருவள்ளூர் மாவட்டக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. கண் தானம் மறைந்த விஜயசாரதியின் இரண்டு கண்களும் செவ்வாயன்று காலை தானம் செய்யப்பட்டது. இதனை சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் வந்து எடுத்துச் சென்றனர். உடல் தானம் மறைந்த விஜய்சாரதியின் உடல் புதனன்று (டிச 31), சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உடலை தானமாக வழங்குகின்றனர். ஏற்கெனவே துளசிநாராயணன் தந்தை அய்யலு உடல் தானம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  கும்மிடிப்பூண்டி (வஜந்த பஜார்) ரயில் நிலையம் அருகில் உள்ள துளசிநாராயணன் இல்லத்தில் புதனன்று (டிச 31), காலை 9 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெறும்.   கண் தானம் செய்யப்பட்டதை ஒட்டி மருத்துவமனை சார்பில் சான்றிதழ் வழங்கினர். இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மூத்த  உறுப்பினர்  அ.பாக்கியம் தோழர் விஜயசாரதியின் சகோதரர்கள் பி.ஜெயநாராயணன், பி.கிரிதர், பி.பிரசன்னா ஆகியோர் அருகில் உள்ளனர்.