states

img

ம.பி; இந்தூரில் மாசடைந்த தண்ணீரை குடித்த 5 பேர் உயிரிழப்பு!

இந்தூரில் மாசடைந்த குடிநீரை அருந்தியதால் கடந்த ஒரு வாரத்தில் 5 பேர் உயிரிழந்ததுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகீரத்புரா பகுதியில் மாசடைந்த குடிநீர் விநியோகிக்கப்பட்ட நிலையில் அதை குடித்து கடந்த ஒரு வாரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளானர். 1000க்கும் மேற்ப்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 70 வயதான நந்த்லால் பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாசடைந்த குடிநீரே உடல்நலக் குறைபாடுகளுக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
முதற்கட்ட விசாரணையில் அகழ்வுப் பணிகளால் குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டிருக்கலாம் அல்லது மேல்நிலை நீர்த்தொட்டியில் மாசு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசும், அழுக்கான நீர் விநியோகிக்கப்படுவதாக பலமுறை புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.