states

img

திரிபுரா மாணவரை “சீனாவைச் சேர்ந்தவர்” என குற்றம்சாட்டி படுகொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

திரிபுரா மாணவரை “சீனாவைச் சேர்ந்தவர்”  என குற்றம்சாட்டி படுகொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

டேராடூன் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சல் சக்மா என்ற மாணவர், பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இளைஞரான அஞ்சல் சக்மாவின் சகோதரர், மைக்கேல் சக்மா உத்தராஞ்சல் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். படுகொலை இந்நிலையில், சகோதரர்கள் இருவரும் டிச.9ஆம் தேதி அன்று டேராடூன் அருகே செல கோய் என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தனர். அப்போது இவர்களை வழிமறித்த ஒரு கும்பல்,”நீங்கள் சீனர்கள்” எனக் கூறி மிரட்டியுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட அஞ்சல் சக்மா,”நாங்கள் சீனர்கள் அல்ல, இந்தியர்கள். இதை நிரூபிக்க என்ன சான்றிதழ் காட்ட வேண்டும்?” என்று அமைதியாக பதில் அளித்தார். ஆனால் ஆத்திரமடைந்த அந்தக்  கும்பல் மைக்கேலை தாக்கியதுடன், தடுக்க வந்த அஞ்சல் சக்மாவின் கழுத்து, முதுகு மற்றும் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அஞ்சல் சக்மா டேராடூனில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சகோதர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அஞ்சல் சக்மா டிச., 26 அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்துத்துவ குண்டர்கள்? இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக அவ்னிஷ் நேகி, சவுர்யா ராஜ்புத், சூரஜ் குவால், சுமித், ஆயுஷ் பரோனி உட்பட 5 பேரை டேராடூன் காவல்துறையினர் கைது செய்துள்ள னர். அவர்கள் யார்? எந்த கட்சி மற்றும் அமைப் பைச்  சேர்ந்தவர்கள்? என்பது தொடர்பாக உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்துத்துவா குண்டர்கள் என்ப தால், உத்தரகண்ட் பாஜக அரசு குற்றவாளி களின் முழு விபரத்தை வெளியிடவில்லையா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. ஜிதேந்திர சவுத்ரி இந்நிலையில், திரிபுரா மாணவரை “சீனாவைச் சேர்ந்தவர்” என குற்றம்சாட்டி படுகொலை செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், திரிபுரா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில்,“திரிபுராவைச் சேர்ந்த திறமையான மாணவரான அஞ்சல் சக்மா, தனது சகோதரர் மைக்கேல் சக்மாவுடன் வெளியே சென்ற போது கொடூரமாக தாக்கப் பட்டுள்ளார். 15 நாட்களுக்கு மேலாக  மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி, இறுதியில் டிசம்பர் 26 அன்று அஞ்சல் சக்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். 2014இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மை யின்மையால் தூண்டப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த காலங்களில் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.  தோற்றத்தில் வித்தியாசமாக இருப்ப வர்கள், மாறுபட்ட உணவுப் பழக்கம் கொண்ட வர்கள் அல்லது வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் கல்லூரி வளாகங்களில் கூட இலக்கு வைக்கப்படுகிறார்கள். இதற்கு “சகிப்புத்தன்மையற்ற அரசியலே” காரணம். கர்பி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வர்கள் “சீனர்கள்” என்று முத்திரை குத்தப்படு கின்றனர். “ஜெய் ஸ்ரீ ராம்” போன்ற முழக்கங்க ளுக்கு மத்தியில் அவர்கள் இலக்கு வைக்கப்படு கின்றனர். அசாமின் அங்லாங் மாவட்டத்தில் கூட வெறுப்புக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. இத்த கைய நிகழ்வுகள் மிகவும் கவலையளிக்கின் றன. பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு எதி ராக சிவில் சமூக அமைப்புகளும் மக்களும் குரல் கொடுக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது கலாச்சாரத்தில் இயல்பா கவே உள்ளது. எந்த விலையைக் கொடுத்தா வது அதனை பாதுகாக்க வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.