tamilnadu

img

மக்களவைத் தேர்தலை விட 17 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது எல்டிஎப் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் பேச்சு

மக்களவைத் தேர்தலை விட 17 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது எல்டிஎப் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் பேச்சு

திருவனந்தபுரம் மக்களவைத் தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 17 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறியுள்ளார்.  திருவனந்தபுரத்தில் சிபிஎம் மாநி லக் குழு கூட்டத்தின் முடிவுகளை செய்தியாளர்களிடம் விளக்கிய போது அவர் மேலும் பேசுகையில்,”கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியை சரியான திசை யில் மதிப்பிடுவோம். கடந்த மக்கள வைத் தேர்தலில் இடதுசாரிகள் 33.60 சதவிகித வாக்குகளைப் பெற்றனர். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் 39.73% ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த மக்களவைத் தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தலில் 17,35,175 வாக்கு கள் அதிகரித்துள்ளன. மக்களவைத் தேர்தலில் எல்டிஎப் 66,65,370 வாக்கு களைப் பெற்றது. உள்ளாட்சித் தேர்த லில் 84,10,085 வாக்குகளாக அதிக ரித்துள்ளது. யுடிஎப் மற்றும் பாஜகவின் வாக்குகள் வெகுவாக குறைந் துள்ளன.  குறிப்பாக சட்டமன்றத் தொகு திகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல்களைக் கணக்கிட்டால், எல்டிஎப் சுமார் 60 தொகுதிகளில் தெளி வான முன்னிலை வகிக்கிறது. சிறிய வித்தியாசத்தில் பின்தங்கிய பல தொகுதிகள் உள்ளன. அவற்றில் பல உள்ளூர் பிரச்சனைகள், எதிர்க்கட்சி களின் தவறான பிரச்சாரம், வகுப்பு வாத தலையீடு மற்றும் ஊடக வலை யமைப்பின் இடதுசாரி எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக பின்தங்கி யுள்ளன. முறையான அரசியல் பிரச்சா ரத்தை மேற்கொள்வதன் மூலம் அதிகாரத்தை தொடர முடியும் என்று சிபிஎம் நம்புகிறது.  திருவனந்தபுரம் மாநகராட்சி   யுடிஎப் மற்றும் எல்டிஎப் இடையே வலுவான போட்டி இருந்த பல உள்ளாட்சி அமைப்புகளில், பாஜக தனது வாக்குகளை யுடிஎப்-க்கு  அளித்தது. எல்டிஎப் மற்றும் பாஜக இடையே போட்டி இருந்த இடங்களில் யுடிஎப்-ன் வாக்குகள் பாஜகவுக்கு வழங்கப்பட்டது. உதாரணமாக, திரு வனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வென்ற 41 வார்டுகளில் யுடிஎப் மூன்றா வது இடத்தைப் பிடித்தது. அரசாங்கம் குறித்து நல்ல கருத்து உள்ளது. சட்டமன்றத் தேர்தல்கள் இதுபோன்ற விஷயங்கள் விவாதிக்கப்படும் நேர மாக இருக்கும் என்பதால், எல்டிஎப் நல்ல பெரும்பான்மையுடன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று மாநிலக் குழு மதிப்பிட்டது. அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியான பொய் பிரச்சாரத்தை யுடிஎப் கட்டவிழ்த்துவிட்டுள்ளது, அது சிறப்பாக செயல்படுகிறது. வளர்ச்சியின் சாதனைகளை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்த யுடிஎப் மற்றும் பாஜக, வகுப்புவாத பிரச்சாரங்க ளையும் பொய்யான கதைகளையும் வாக்குகளாக மாற்றும் நடவடிக்கை களை மேற்கொண்டன. இந்துத்துவா வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகளை பாஜக வழிநடத்தியது. ஜமாத்-இ-இஸ்லாமியின் மத-அரசு கருத்துக்க ளைப் பயன்படுத்தி முஸ்லிம் லீக் பொய்யான பிரச்சார நடவடிக்கை களை வழிநடத்தியது. ஐக்கிய ஜன நாயக முன்னணியின், பிரச்சார நடவ டிக்கைகளில் ஜமாத்-இ-இஸ்லாமி யுடன் ஒத்துழைக்க முஸ்லிம் லீக் தலை மையில் அதன் கூட்டணி கட்சிகள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண் டன. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்து வகுப்பு வாதத்தையும் வலுப்படுத்துவதையும் இடதுசாரிகளை முக்கிய எதிரியாகக் காண்பதையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன” என அவர் கூறினார்.

பொருளாதார முற்றுகையை எதிர்த்து முதலமைச்சர் பினராயி விஜயன் உண்ணாவிரதம்

சிபிஎம் தனது எதிர்காலப் பணிகளை வலுப்படுத்தவும், மக்களின் கருத்துக்களைக் கேட்கவும் ஜனவரி 15 முதல் 22 வரை வீடு வீடாகச் செல்ல சிபிஎம் கேரள மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. கட்சி வேறுபாடின்றி, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வி குறித்தும், வெளிப்படையான விவாதம் நடத்துவோம். இதில் அனைத்து மட்டங்களிலும் உள்ள சிபிஎம் தலைவர்கள் பங்கேற்பார்கள். பின்னர், வார்டு அடிப்படையில் குடும்பக் கூட்டங்களும், உள்ளூர் அடிப்படையில் பொதுக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்படும். வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அழிப்பது உட்பட, ஒன்றிய அரசின் விரோதப் போக்கு மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக வலுவான போராட்டத்தைத் தொடங்கவும் சிபிஎம் மாநிலக் குழு முடிவு செய்துள்ளதாகவும் எம்.வி.கோவிந்தன் கூறினார். கேரளாவுக்கு எதிரான பொருளாதார முற்றுகைக்கு எதிராக, ஜனவரி 12 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் முதலமைச்சரின் உண்ணாவிரதம் மற்றும் பிப்ரவரி 1 முதல் 15 வரை எல்டிஎப் நடத்தும் மாநில அளவிலான மூன்று பேரணிகளையும் வெற்றிபெறச் செய்வோம். வேலை உறுதிச் சட்டம் அழிக்கப்படுவதை எதிர்த்து ஜனவரி 5 ஆம் தேதி கேரளாவின் 23,000 வார்டுகளில் வேலை பாதுகாப்புக்கான ஒரு பேரணியை என்ஆர்ஜிஇ தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்கிறது. இந்த சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக ஒரு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்படும். 15 ஆம் தேதி ஆளுநர் மாளிகை மற்றும் மாவட்ட மையங்களில் பேரணி நடத்துவது குறித்தும் சட்டமன்ற கூட்டத்தின்போது அறிவிக்கப்படும் என எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார்.