குல்தீப் சிங் செங்காருக்கு ஆதரவாக போராட்டம் ஒரே கேள்வியில் ஆர்எஸ்எஸ் பெண் தலைவரை ஓட்டம் பிடிக்க வைத்த பத்திரிகையாளர்
புதுதில்லி உன்னாவ் பாலியல் வன்கொடு மை வழக்கில் ஆயுள் தண் டனை அனுபவித்து வந்த முன்னாள் பாஜக எம்எல்ஏவும், ஆர் எஸ்எஸ் அமைப்பிற்கு மிக நெருக்க மானவருமான குல்தீப் சிங் செங்கா ருக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக் கால ஜாமீன் மற்றும் தண்டனை நிறுத்தம் வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு நாட்டில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் தில்லி உள்பட நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. இந்த போராட்டத்திற்கு போட்டி போராட்டம் என்ற பெயரில், பாலியல் வன்கொடுமை குற்றவாளி குல்தீப் சிங் செங்காருக்கு ஆதரவாக பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் மகளிர் அமைப்பு கள் தில்லியில் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண் ணிடம் (பர்கா திரேகான்) செய்தியாளர் ஒருவர், “ஒருவேளை உங்கள் சொந்த மகளுக்கே இப்படி ஒரு பாலியல் பலாத்காரம் (குல்தீப் சிங் செங்கார் வழக்கு போ ன்று) நடந்திருந்தால், அப்போதும் நீங்கள் இதேபோல் ஆதரவு தெரி விப்பீர்களா? குற்றவாளிக்கு ஆதர வாக போராட்டம் நடத்துவீர்களா?” என கேள்வி எழுப்பினார். அவ்வளவு தான், அந்த பெண்,“நன்றி” என்று கூறிவிட்டு, போராட்டக் களத்தை விட்டே ஓட்டம் பிடித்துவிட்டார். இத்தகைய சூழலில், கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு ஒரு சல்யூட்! என சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னதாக, குல்தீப் சிங் செங்கா ருக்கு ஜாமீன் மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்து, தீர்ப்பு வழங்கிய தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தர வை திங்களன்று உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது என்பது குறிப்பி டத்தக்கது.
