40 வயதில் 40 கோல்கள் 1000 கோல்கள் சாதனையை நோக்கி ரொனால்டோ
கால்பந்து உலகில் பொதுவாக வீரர்கள் 35 வயதிற்குள் ஓய்வு பெற்றுவிடுவர். இல்லையென்றால் காயம் காரணமாக குறைந்தப் போட்டியில் விளையாடுவர். ஆனால் கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல் நாட்டின் தேசிய கேப்டன்) 40 வயதை நெருங்கும் வேளையிலும், ஒரே சீசனில் 40 கோல்கள் என்ற இலக்கை மிக எளிதாக எட்டி வருகிறார். சவூதி புரோ லீக் தொடரில் அல்-நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கடந்த சீசனில் மட்டும் அனைத்துப் போட்டிகளையும் சேர்த்து ஒரே ஆண்டில் 40 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் சேர்த்து ஒட்டுமொத்த மாக 900 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையை ரொனால்டோ படைத்தார். ரொனால்டோவும், கோல்களும் இத்தகைய சூழலில் ரொனால்டோ 1000 கோல்களை அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். ரொனால்டோ இதுவரை 956 கோல்கள் அடித்துள்ள நிலையில், 1000 கோல்கள் சாதனையை நெருங்க இன்னும் 44 கோல்கள் மட்டுமே தேவை ஆகும். 2026ஆம் ஆண்டு 1000 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைப்பார் என எதிர்பார்க்கப்டுகிறது. ரியல் மாட்ரிட் - 450, மான்செஸ்டர் யுனைடெட் - 145, போர்ச்சுகல் (சர்வதேச போட்டிகள்) - 156, யுவென்டஸ் - 101, அல்-நசர் - 112, ஸ்போர்ட்டிங் சிபி 5 கோல்கள் என மொத்தம் 956 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீலே 1000 கோல்களுக்கு மேல் அடித்தாரா?
அதிகாரப்பூர்வமான கால்பந்து போட்டிகளில் (Official Matches) 1000 கோல்களைக் கடந்த ஒரே வீரர் கூட இதுவரை இல்லை. தற்போது விளையாடும் வீரர்களில் 1000 கோல்களை நோக்கி மிக நெருக்கமாக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே உள்ளார். 850+ கோல்களுடன் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார். பிரேசில் ஜாம்பவான் பீலே தான் 1000 கோல்களுக்கும் மேல் அடித்ததாகக் கூறப்படுகிறது. அவரது கின்னஸ் சாதனையின்படி அவர் 1,281 கோல்கள் அடித்துள்ளார். இதில் நட்பு ரீதியிலான போட்டிகள் மற்றும் காட்சிப் போட்டிகளில் அடித்த கோல்களும் அடங்கும். ஆனால் அதிகாரப்பூர்வப் போட்டிகளில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை சுமார் 762 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் 2 தமிழ்நாடு வீரர்கள்
16ஆவது சீசன் இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்கள் - 19 வயதுக்குட்பட் டோருக்கான) தொடர் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த உல கக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சனிக்கிழமை அன்று அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியை ஆயுஷ் மாத்ரே கேப்டனாக வழிநடத்த உள்ளார்.அணி வீரர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த தீபேஷ் தேவேந்திரன் மற்றும் ஆர்.எஸ்.அம்பிரிஷ் இடம்பெற்றுள்ளனர். இந்த இரண்டு வீரர்களும் சென்னை யைச் சேர்ந்தவர்கள். வேகப்பந்துவீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் அண்மையில் துபையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மற் றொரு தமிழக வீரரான ஆர்.எஸ்.அம்பி ரிஷ் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.