2 நாட்களில் நிறைவடைந்த “பாக்சிங் டே” டெஸ்ட் மெல்போர்ன் மைதானம் குறித்து ஐசிசி அதிருப்தி
நடப்பாண்டுக்கான ஆஷஸ் தொடரின் 4ஆவது ஆட்டம் “பாக்சிங் டே (கிறிஸ்துமஸ் பரிசு)” டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் (ஆஸ்திரேலியா) டிச., 26 அன்று தொடங்கி, டிச., 27 அன்று நிறைவு பெற்றது. இங்கிலாந்து - ஆஸ்தி ரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டி உலக பிரசித்தி பெற்றது மட்டு மின்றி பரபரப்பாக நடைபெறும் என்ற நிலையில், மெல்போர்னில் நடை பெற்ற ஆட்டம் வெறும் 2 நாட்களில் நிறைவு பெற்றது. 15 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கி லாந்து அணி வெற்றி பெற்றது. டிக்கெட் மற்றும் அறை வாடகை என பல லட்சம் செலவு செய்து கிரிக்கெட் ரசிகர்கள் 5 நாள் கொண்ட பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை காண ஆவலுடன் மெல்போர்ன் மைதானத்துக்கு வந்தனர். ஆனால் மைதானம் தகுதியற்ற தன்மையில் இருந்ததால், பந்துவீச்சுக்கு சாதக மாக மாறியது. 2 நாட்களில் 36 விக்கெட்டுகள் சரிந்தன. பேட்டிங் கொஞ்சம் கூட எடுபடவில்லை. இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மெல்போர்ன் மைதா னத்தின் தன்மை சீராக இல்லை. பந்து வீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன் களுக்கும் சமமான வாய்ப்பை வழங்க வில்லை. மைதானத்தின் தரம் “சராசரிக்கும் குறைவு (Below Average)” அல்லது “திருப்திகர மற்றது (unsatisfactory)” என்ற மதிப்பீட்டை பெற்றுள்ளது. போட்டி நடுவர் ஜெப் க்ரோவ்,”ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு மிக அதிகமாக சாதகமாக இருந்தது” என்பதை உறு திப்படுத்தியுள்ளார். 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்க வில்லை. இதனால் மைதானத்திற்கு ஒரு டிமெரிட் புள்ளி (தண்டனை புள்ளி) வழங்கப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய இளையோர் மகளிர் கபடி ஹரியானா சாம்பியன்
51ஆவது தேசிய இளை யோர் மகளிர் கபடி போட்டிகள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் டம்டம் சிறைச் சாலை மைதானத்தில் டிச., 25 அன்று தொடங்கியது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் டிச., 28 அன்று நடை பெற்றது. இறுதி ஆட்டத்தில் ஹரி யானா - சாய் (இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், முழு ஆட்டநேர முடிவில் ஹரியானா - சாய் அணிகள் 39-39 என்ற புள்ளிக் கணக்கில் சரிசம அளவில் இருந்தன. டைபிரேக்கர் ரைடு கொடுக்கப் பட்டது. டைபிரேக்கரும் 5-5 என்ற புள்ளிக் கணக்கில் சரிசமமாக நிறை வடைந்தன. இதனால் முதல் பாதி முன்னிலை உள்ளிட்ட பல்வேறு முன்னிலை காரணிகளுடன் ஹரியா னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. ஹரியானா சாம்பியன் பட்டத் துடன் தங்கப்பதக்கம் வெல்ல, சாய் வெள்ளிப்பதக்கம் வென்றது. ராஜஸ்தான், சண்டிகர் வெண்கலப் பதக்கம் வென்றன. அதிகம் எதிர்பார்த்த தமிழ்நாடு அணி காலிறுதியில் சாம்பியன் பட்டம் வென்ற ஹரியானா அணியிடம் 45-46 என்ற புள்ளிக்கணக்கில் நூலி ழையில் தோல்வியை தழுவியது.
