tamilnadu

img

கீழடியில் 11 ஆம் கட்ட அகழாய்வு: ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி!

கீழடியில் 11 ஆம் கட்ட அகழாய்வு: ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி!

சென்னை, டிச. 29 - சிவகங்கை மாவட்டம், கீழடியில் 11-ஆம்  கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வ தற்கு இந்தியத் தொல்லியல் துறை அதிகாரப் பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.  சங்க காலத் தமிழர்களின் நாகரிகத்தை, மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள இது  ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படு கிறது. 10-ஆம் கட்ட அகழாய்வு குறித்த அறிக் கையை ஒன்றிய பாஜக அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்ததை அடுத்து,  11-ஆம் கட்ட அகழாய்விற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை நான்கு  சதவிகிதத்திற்கும் குறைவான பரப் பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11-ஆம் கட்ட ஆய்வு மூலம் வைகை நதிக்கரை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்களை வெளிக்கொணர திட்டமிடப்பட்டுள்ளது. கீழடி மட்டு மின்றி, அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளிலும் விரிவான ஆய்வுகள் தொடர வாய்ப்புள்ளது. இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வு களில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட  தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஜனவரியில் திறந்தவெளி அருங் காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு 11 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.