சாதியச் சமூகத்திற்கு எதிராக தொடர்ந்து பணியாற்றுவேன்!
இயக்குநர் மாரி செல்வராஜ் பேச்சு விருதுநகர், டிச. 29 - விருதுநகர் மாவட்டம், சிவகாசி யில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு அவரது ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் மாவட்ட கிராம மக்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்கு நர் மாரி செல்வராஜ், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், 30 ஆண்டுக்குப் பின்பு, தம்பி மாரி செல்வராஜ் தன்னை வெளியுல கிற்குக் கொண்டு வந்ததாகவும், தனது விளையாட்டு கால வாழ்க் கையை மிகவும் நேர்த்தியாகப் பட மாக்கியுள்ளதாகவும் பாராட்டினார். தற்போது அனைவரும் தன்னை பை சன் என்றுதான் அழைக்கின்றனர் என்றார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் ஆகிய தலைவர்களின் லட்சியங்களை அடைவதே தனது இலக்கு என்றும், அதனால் படங்களில் மானுடத்தைத்தான் பேசு வேன் என்றும் தெரிவித்தார். தான் சாதிக்கு எதிரான ஒருவன் என்றும், தான் அறத்தின் பக்கம்தான் நிற் பேன் என்றும் கூறினார். ஒருவேளை தான் அரசியலுக்கு வந்து ஈடுபட்டாலும், ஏதேனும் ஒரு அமைப்பைத் தொடங்கினாலும் சாதியச் சமூகத்திற்கு எதிராகச் செயல் படுபவனே ஒழிய, தனது சமூ கத்தைக் காட்ட வேண்டிய கடமை இருந்தாலும்கூட மானுட சமூ கத்தின் மீது பேரன்பை நிலை நாட்டுவதுதான் முக்கியம் என்றார். தனக்கு சாதிய முத்திரை குத்த வேண்டாம் என்றும், உண்மையில் தன்னை நேசிப்பவர்கள், தனது அர சியலைப் புரிந்துகொண்டு அதனைச் செயல்படுத்த வேண்டும் என்பதே தனது ஆசை என்றார். மாறாக, தனது அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, வெறுமனே நமது சமூகத்தைச் சேர்ந் தவன் என்பதற்காக நேசித்தால், அதில் முழு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்தார்.
