சென்னை பல்கலைக்கழக மசோதா 3 ஆண்டுகளுக்குப் பின் திருப்பி அனுப்பிய ஜனாதிபதி
சென்னை, டிச. 29 - கடந்த மூன்று ஆண்டுகள் நிலுவை யில் வைக்கப்பட்டிருந்த சென்னை பல் கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 13 மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நிய மிக்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங் களில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. முன்னதாக மசோதா தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகை யில், கடந்த நான்கு ஆண்டுகளில் துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பல் கலைக்கழக நிர்வாகங்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாகவும், இது மக்களாட்சித் தத்துவத்துக்கே விரோத மாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட் டார். தமிழகத்திற்கு வேறொன்றா? பல மாநிலங்களில் துணைவேந்தர் கள் நியமனம் எவ்வாறு நடக்கிறது என ஆராய்ந்தபோது, குஜராத், ஆந்திரா, தெலுங்கானாவில் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவர் மாநில அரசின் ஒப்புத லோடு நியமிக்கப்படுவது தெரியவந்த தாகவும், எனவே பிரதமர் மோடி முதல்வராக இருந்த குஜராத்தில் உள்ளது போல தமிழ்நாட்டிலும் மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழ கங்களின் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி பேசுகையில், வேந்தர் என்ற சொல்லுக்குப் பதிலாக அரசு என மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், துணைவேந்தர்களை நிய மிக்கும் வேந்தரின் அதிகாரத்தைப் பறித்து முதல்வருக்கு வழங்கும் இந்த சட்ட முன்வடிவினை ஆதரிப்பதாகவும் கூறினார். இதேபோல விசிக, பாமக, தவாக, கொமதேக உள்ளிட்ட கட்சி களும் ஆதரித்தன. திருப்பி அனுப்பிய ஜனாதிபதி இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2022 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக குரல் வாக்கு எடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்த மசோதா ஆளு நருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். அதனை கடந்த மூன்று ஆண்டு காலமாக கிடப்பில் போட்டு இருந்த நிலையில் தற்போது, குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பி வைத்துள் ளார்.