tamilnadu

img

அணுசக்தி தனியார்மயத்திற்கு எதிர்ப்பு : மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து  திருப்பூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச.29- ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் மின் சார சட்ட திருத்த மசோதா 2025 ஐ  கண்டித்து திருப்பூர் மேட்டுப்பாளையம்  பகுதியில் உள்ள மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சாரத் தொழிலாளர் சங்கங்க ளின் கூட்டுக்குழு சார்பாக ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மின்சாரத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, மின்சார வாரி யங்களை தனியார் மயப்படுத்த அனும திக்க மாட்டோம், விவசாயிகள், ஏழை  மக்கள் இலவச மின்சாரத்தை பறிக்க  அனுமதிக்க முடியாது, தொழிலாளர்க ளுக்கு விரோதமான நான்கு சட்டத்  தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும்  என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு, ஏஐடியுசி,  ஐஎன்டியூசி, எல்பி எப், எச்எம்எஸ், ஏஐசிசிடியு, டியுசிசி,  எம்எல்எப் உள்ளிட்ட பல்வேறு சங்கங் கள் பங்கேற்றனர். டிஎன்இபி ஊழியர் கூட்டமைப்பின் பொருளாளர் ஜான்சன்  தலைமை ஏற்றார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். குமார் போராட்டத்தை ஆதரித்து வாழ்த்திப் பேசினார். மேலும், ஏஐடியுசி சார்பில் பி.ஆர்.நடராஜன், எச்எம்எஸ் நிர்வாகி கோவிந்தசாமி, சதீஷ் சங்கர்  உள்ளிட்டோர் உரையாற்றினர். சிஐடியு  மாவட்ட துணைத் தலைவர் பி.பாலன், சிஐடியு பனியன் சங்க பொருளாளர் நாகராஜ் உள்பட மின்சார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.