மக்களிசை விழாவில் கரகாட்டக் கலைஞருக்குப் பாராட்டு
‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் டிசம்பர் 27 முதல் 29 வரை சென்னையில் ‘மார்கழியில் மக்களிசை’ விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதுரையைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் தர்மம்மாளுக்கு ‘மக்களிசை மாமணி விருது’ வழங்கப்பட்டது. விருதை இயக்குநர் பா. ரஞ்சித் வழங்க, நினைவுப் பரிசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், எழுத்தாளர் சிவகாமி ஆகியோர் வழங்கினர்.
