games

img

விளையாட்டு...

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 2024 இந்தியா சாம்பியன்

முதன்முறையாக இரண்டாம் இடம் பிடித்த சீனா

சீனாவின் ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வந்த 8ஆவது சீசன் ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன. இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, சீனா ஆகிய 4 நாடு கள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலை யில், அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை சீனாவும், தென் கொரி யாவை இந்தியாவும் வீழ்த்தி, இந்தியா  - சீனா ஆகிய அணிகள் இறுதிக்கு முன்னேறின. இந்திய நேரப்படி செவ்வாயன்று மதியம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதிய நிலை யில், இரு அணிகளும் கோலடிக்கும் முனைப்பில் தொடக்கம் முதலே அதிரடி  ஆட்டத்தை வெளிப்படுத்தின. 3ஆவது கால் பகுதி வரை இரு அணிகளும் கோல டிக்காமல் இருந்ததால், இந்த ஆட்டம் பெனால்டி சூட் அவுட் வரை நீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4ஆவது கால் பகுதியின் கடைசி நேரத்தில் இந்திய வீரர் ஜூக்ராஜ் சிங் கோலடித்து சீன வீரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பதிலுக்கு சீன வீரர்கள் கோலடிக்க பல்வேறு முயற்சி மேற்கொண்டும் பலனளிக்காத நிலை யில், ஆட்டநேர முடிவில் இந்தியா 1-0  என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி  5ஆவது முறையாக ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி யது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறிய சீனா இரண்டாம் பிடித்து தனக்கென்று வரலாறு படைத்தது. சீனா 2012, 2013 ஆண்டுகளில் 4ஆம் பிடித்ததே அதிகபட்சமாக முன்னேற்ற மாக இருந்தது. முன்னதாக நடைபெற்ற 3ஆவது  இடத்திற்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5-3 என்ற கோல் கணக்கில் தென்  கொரியாவை வீழ்த்தி 3ஆம் இடம் பிடித்த நிலையில், தென் கொரியா 4ஆம்  இடம் பிடித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

மகளிர் டி-20 உலகக்கோப்பை 2024 அட்டவணையை ஐசிசி வெளியிட்டது

9ஆவது சீசன் மகளிருக்கான  டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் 3 அன்று துவங்குகிறது. இந்தியா,  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ் தான், இலங்கை (குரூப் ஏ) மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கி லாந்து (குரூப் பி) ஆகிய 10 அணி கள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ் வொரு அணியும் தங்களது பிரிவிற்குள் 4 ஆட்டங்களில் பங்கேற்கும்.  லீக் ஆட்டங் களில் முடிவில் ஒவ்வொரு குழுவிலிரு ந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அக்டோபர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெறும் அரை யிறுதி போட்டிக்கு முன்னேறும். தொடர்ந்து அக்டோபர் 20 அன்று துபா யில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.  இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை (அக்., 4) எதிர் கொள்ள உள்ளது.