சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில், இந்திய வீராங்கனை அங்கிதா தியானி முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
சர்வதேச அளவிலான தடகளப் போட்டி இஸ்ரேல் ஜெருசலேம் நகரில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான 2,000 மீ ஸ்டீபிள்சேஸில் 6 நிமிடம், 13.92 விநாடிகளில் இலக்கை எட்டி இந்திய வீராங்கனை அங்கிதா தியானி தங்கம் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்திய வீராங்கனை பருல் சவுத்தரி 6:14.38 நேரத்தில் கடந்திருந்த சாதனையை அங்கிதா தியானி முறியடித்துள்ளார்.
மேலும் இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிலும் 5000மீ ஓட்டப்போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார்.