ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா அணி, பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன்மூலம், இந்தியா 9வது முறையாக ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சமநிலையுடன் விளையாடிய இந்திய அணி, பாகிஸ்தான் நிர்ணயித்த இலக்கை எளிதாக அடைந்தது.
ஆசியக் கோப்பையில் அதிக முறைகள் சாம்பியன் பட்டம் வென்ற அணியாக இந்தியா தனது முன்னணித் தரத்தை மேலும் உறுதி செய்துள்ளது. இந்த வெற்றி ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ACC தலைவராக உள்ள பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்து, கோப்பை இல்லாமலேயே கையில் கோப்பை இருப்பது போல பாவித்து. இந்திய வீரர்கள் வெற்றியை கொண்டாடினர்.