games

img

ஆஸி. ஓபனை மிரட்டும் சென்னை சாம்பியன் புருஹ்விர்டோவா

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் உலகின் இளம் அதிரடி வீராங்கனையும், செக்குடியரசை சேர்ந்தவருமான லிண்டா புருஹ்விர்டோவா(17) தனது 3-வது சுற்று ஆட்டத்தில் சக  நாட்டு வீராங்கனையான மார்க் கெட்டாவை 7-5, 2-6, 6-3 என்ற செட்  கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவில் பிளிஸ்கோவா (செக்குடியரசு), வெக்கிச் (குரோ ஷியா), பென்கிச் (சுவிஸ்), ஜங் (சீனா), கார்சியா (பிரான்ஸ்), சப லென்கா (பெலாரஸ்) ஆகியோ ரும் 4-வது சுற்றுக்கு முன்னேறி னர். அதிரடிக்கு பெயர் பெற்ற நட் சத்திர வீராங்கனை மார்டென்ஸை (பெல்ஜியம்), உலக தரவரிசை யில் 5-வது இடத்தில் உள்ள பெலா ரசின் சபலென்கா 6-2, 6-3 என்ற  செட் கணக்கில் வீழ்த்தி வெளியேற்றினார்.

சென்னை நாயகி கலக்கல்

வெறும் 17 வயது உடைய இளம் வீராங்கனையான செக்குடியரசின் லிண்டா புருஹ்விர்டோவா டபிள்யு.டி.ஏ தொடரில் மட்டும் அசத்தி பல சாம்பியன் பட்டங்களை வென்று வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் மிரட்டி வரு கிறார். யாரும் எதிர்பாராத வகையில் அனு பவமிக்க சீனியர் வீராங்கனைகளை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறி யுள்ளார் சென்னை நாயகி லிண்டா புருஹ்விர்டோவா. இவரை சென்னை நாயகி என அழைக்க காரணம் சமீபத்தில் நிறைவு பெற்ற சென்னை ஓபன் (2022) டென்னிஸ் தொடரில் வயதுக்கு ஏற்ப மிரட்ட லான அதிரடி ஆட்டத்துடன் சாம்பியன் பட்டம் வென்றார். இவரது ஆட்டத்தால் டென்னிஸ் விளையாட்டை பற்றி தமி ழர்கள் அறியாத நபர்கள் கூட புருஹ்விர் டோவாவின் தீவிர ரசிகர்களாக மாறி விட்டனர். செக் குடியரசு புருஹ்விர்டோவா விற்கு தமிழ்நாட்டில் தனி ரசிகர்கள் பட்டா ளம் இருப்பதால் இன்று வரை அவர் “சென்னை நாயகி” என்று இந்திய டென்னிஸ் உலகில் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

அதிகபட்ச முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் புருஹ்விர்டோவாவின் அதிகபட்ச முன் னேற்றம் நடப்பு சீசன் ஆஸ்திரேலிய ஓபன்  தொடரின் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்ற தாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு அமெ ரிக்க ஓபனில் 2-ஆம் சுற்றுக்கு தகுதி பெற்  றதே கிராண்ட்ஸ்லாம் தொடரில் அதிகபட்ச முன்னேற்றமாக இருந்தது.

ரப்லவ் அபாரம்

ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் அதிரடி நாயகனும், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான ரப்லவ், பிரிட்டனின் எவன்ஸை 6-4, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவில் டென்மார்க்கின் ரூனே, ஆஸ்திரேலியாவின் டீ மினார் ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.