games

img

டி-20 உலகக்கோப்பை - ஸ்பெஷல் இன்னும் 4 நாட்கள்

(அக்., 16 - நவ., 13, ஆஸ்திரேலியா)

8-வது சீசன் உலகக்கோப்பையில் பங்கேற்கவிருக்கும் மூன்றாம் தர அணிகளான நெதர்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, யுஏஇ, அயர்லாந்து,  ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை பற்றி திடமாக எந்த கருத்தும் கூற முடியாது. அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் ஒருநாள் போட்டிகளில் 2-வது தரத்தில் இருந்தாலும், டி-20 போட்டிகளில் கடந்த 6 மாத காலகட்டத்தில் இந்த 4 அணிகளும், அணிகளின் வீரர்கள் சர்வதேச அளவில் பெயரளவில் சோபிக்கவில்லை. இதனால் அணியின் பார்ம், வீரர்களின் திறன்  பற்றி திடமாக கருத்துக் கூற முடியாது. அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து  ஆகிய அணிகள் பிரிட்டன் மண்ணில் நன்கு விளையாடி பழக்கப்பட்டவர்கள்.  பிரிட்டன்  மண் போன்று 60% உயிரோட்டமான அமைப்பை போன்று  ஆஸ்திரேலிய மண்ணும்  இருப்பதால் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள்  உலகக்கோப்பை டி-20 தொடரில் மிரட்டலான  ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நமீபியா, ஜிம்பாப்வே, யுஏஇ அணிகளுக்கு ஆஸ்திரேலிய மண் பழக்கமில்லாத மற்றும் ஆதிக்கம் செலுத்த முடியாத மண் என்பதால் சற்று திணற வாய்ப்புள்ளது. 

;