லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணித்த இந்தியா
மூத்த ஜாம்பவான்கள் பங்குபெறும் “லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட்” தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்க இருந்தன. இந்திய நேரப்படி ஞாயிறன்று இரவு 9 மணிக்கு பர்மிங்ஹாமில் நடைபெற இருந்தது. ஆனால் யுவராஜ் சிங் தலைமையிலான “இந்தியா சாம்பியன்ஸ்” அணி இடம்பெற்றிருந்த அணியில் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 9 வீரர்கள் திடீரென விலகுவதாக அறிவித்தனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றஞ்சாட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டோம் விலகிய வீரர்கள் அறிவித்தத தாக செய்திகள் வெளியாகியுள்ளது. இத னால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் கடைசி நேரத்தில் ரத்தாகியுள்ளது.
விளையாட்டு உலகில் இந்தியா மீதான கவுரவம் பாதிக்கும்
கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது வரலாற்று சிறப்புமிக்கது ஆகும். எல்லை பிரச்சனை மோதலால் இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி பரபரப்பாக நடைபெறும். இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி கிரிக் கெட் உலகில் அதிக எதிர்பார்ப்புடன் நகரும்; ரசிகர்களுக்கு விருந்தாக வும் அமையும். இத்தகைய சூழலில், அதே எதிர்பார்ப்புடன் லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மீது ரசிகர்கள் கவனத்தை வைத்து இருந்தனர். பர்மிங்ஹாம் மைதானத் தில் டிக்கெட் விற்பனையும் அமோக நடைபெற்றதாக செய்திகள் வெளி யாகின. நீண்ட நாளுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மூத்த வீரர் களின் ஆட்டத்தை காண ரசிகர்களும் லண்டனில் இருந்து பர்மிங்ஹாம் நோக்கி பயணம் செய்ய தொடங்கினர். ஆனால் வெறும் 9 மணிநேர இடை வெளியில் இந்திய வீரர்களின் புறக் கணிப்பால், இந்தியா - பாகிஸ்தான் போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டனம் முக்கியமாக இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கி ன்றனர். முன்கூட்டியே சொல்லி இருந் தால் வேறு ஏதாவது நடவடிக்கை எடுத்து இருப்போம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய வீரர்களின் இந்த செயல்பாடு விளை யாட்டு உலகில், இந்தியா மீதான கவு ரவத்தை பாதிக்கும் என்றும் விளை யாட்டு உலகின் வல்லுநர்கள் கூறியுள் ளனர்.
உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா
ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் செஸ் உலகின் “நம்பர் 1 செஸ்” வீரரும், நார்வே நாட்டின் நட்சத்திரமுமான மேக்னஸ் கார்ல்சனை ஒரே தொடரில் அடுத்தடுத்து இரண்டு முறை வீழ்த்தி அசத்தியுள்ளார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா. ஞாயிறன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43ஆவது நகர்வில் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2ஆவது முறையாக வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.