2023-24இல் ரூ.9,741 கோடி வருமானம் ஈட்டிய பிசிசி ஐபிஎல் மூலம் மட்டும் ரூ.5,761 கோடி
கிரிக்கெட் உலகின் பணக்கார வாரியமான இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24ஆம் ஆண்டில் ரூ.9,741 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. ஐபிஎல் மூலம் மட்டும் கிரிக்கெட் வாரியத்திற்கு 5,761 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மேலும், ஐபிஎல் தொடர் அல்லாமல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச தொடர்களுக்கான ஒளி பரப்பு உரிமைகள் மூலம் பிசிசிஐ-க்கு ரூ.361 கோடி வருமானம் கிடைத் துள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. இதுபோக ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மூலம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக் கிறது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூலம் இந்திய கிரிக்கெட் வாரி யத்திற்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் இல்லை என்றால் சிக்கல்
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட திலிருந்தே (2007ஆம் ஆண்டு) பிசிசிஐ-யின் வருமானம் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, உலகின் திறமையான வீரர்களும் பங்கேற்பதால் இந்த தொடர் உலக அளவில் “நம்பர் 1 டி-20 லீக்” ஆக கருதப்படுகிறது. இதனால் தான் ஐபிஎல் தொடர் பிசிசிஐ முக்கிய வருவாயாக உள்ளது. ஐபிஎல் இல்லை என்றால் கிரிக்கெட் உலகின் பணக்கார வாரியம் என்ற சிறப்பை பிசிசிஐ இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.