games

img

உடற்தகுதி இல்லையென்றால் இந்திய அணியில் இடமில்லை

ஆடவர் கிரிக்கெட் அணி யின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் நீக்கப்பட்டார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் அசத்தும் ஒரு முக்கியமான ஆல்ரவுண்டரை நீக்கியதாக சர்ச்சை வெடித்தது.  இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். அதில் ,”பாண்டியா  அருமையான கிரிக்கெட் வீரர் என்றாலும் காயம் காரணமாக நல்ல உடற்தகுதியில் இல்லை. அதனால் தான் இந்திய அணியில் அவர் இடம்பெற வில்லை.காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பார்” என நாட்டின் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் காயம் காரணமாக உடற்தகுதி இல்லையென்றால் அணியில் இடமில்லை என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கங்குலி.

;