games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

வங்கதேசம் - இலங்கை இன்று மோதல்

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன்  உலகக்கோப்பை தற்போது இறு திக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், திங்களன்று நடை பெறும் 38-ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணி கள் மோதுகின்றன. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள வங்கதேச அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று, 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டிய லில் 9-ஆவது இடத்தில் (2 புள்ளி களுடன்) உள்ளது. முன்னாள் சாம்பியனான இலங்கை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2-இல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில்  உள்ளது.   இதில் வங்கதேச அணிமுதல் அணியாக உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிட்டது. இலங்கை அணி இனி விளையாடவுள்ள 2 ஆட்டங் களிலும் (வங்கதேச அணிக்கெதிரான ஆட்டத்தையும் சேர்த்து) வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் டாப்  ஆர்டரில் உள்ள 4 அணிகளின் தோல்வி மூலம் ஏதெனும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தால் அரை யிறுதிக்குச் செல்லலாம்.  இதனால் வங்கதேச அணி யை வீழ்த்தி புதிய பார்முடன் அரையிறுதி ரேஸில் காலடி வைக்கும் முனைப்பில் இலங்கை அணியும், இனி வரும் ஆட்டங் களில் ஆறுதல் வெற்றியுடன் தாய்நாட்டிற்குச் செல்ல வங்கதேச அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக கள மிறங்குவதால் இந்த ஆட்டம் பர பரப்பாக நடைபெறும்  என எதிர்பார்க்க படுகிறது.

வங்கதேசம் - இலங்கை
இடம் : தில்லி மைதானம்
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி - ஹாட்ஸ்டார் 
(இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும். 
ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)

உள்ளே 2... வெளியே 2...

நடப்பு சீசன் உலகக்கோப்பையில் முதல் அணியாக போட்டி நடத்தும் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் அரையிறுதி வாய்ப்பை பெறாமல் முதல் அணியாக உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. தனது சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா 2-ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், சனியன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்த நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி வெளியேறியது. 

போட்டியின் முடிவுகளை அறிவித்து அசத்திய தமிழ்நாடு வெதர்மேன்

35-ஆவது லீக் ஆட்டம் (நியூஸிலாந்து - பாகிஸ்தான்) சனியன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது. 300 பந்துகளுக்கு 402 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி பக்கர் ஜமான் அதிரடியால் (126 - 81 பந்துகள்) 8.0-க்கும் மேற்பட்ட ரன் ரெட் அளவில் வெற்றி இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது 2 முறை ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதில் முதல் தடவை ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட பொழுதே, தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் நியூஸிலாந்து அணி 400 ரன்கள் குவித்து இருந்தாலும், மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கூறினார். பிரதீப் ஜான் அறிவித்தது போலவே 25.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்திருந்த பொழுது  மீண்டும் மழை குறுக்கீட்டு பாகிஸ்தான் அணி டக்வொர்த் விதிப்படி வென்றதாக அறிவிக்கப்பட்டது. வானிலை நிலவரத்தையும், டக்வொர்த் விதியையும் முன்கூட்டியே கணித்து போட்டி முடிவுகளை அறிவித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. வரும் காலங்ககளில் இவரது அறிவிப்புகள் விளையாட்டு உலகிற்கு நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.