ஆடவர் ஒற்றையர் கடைசி காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் நட்சத்திரம் அல்காரஜ் (19), 11-வது இடத்தில் உள்ள இத்தாலியின் சின்னரை (21), 5:15 மணிநேரம் போராடி 6-3, 6-7 (7-9), 6-7 (0-7), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை யிறுதிக்கு முன்னேறினார். டென்னிஸ் உலகில் சீனியர் வீரர்கள் தான் பெரும்பாலும் மாரத்தான் போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் போதிய வயது பக்குவம் இல்லாத இளம் வீரர்கள் அல்காரஜ் - சின்னர் 5:15 மணிநேரம் போராடியது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை
இன்றைய ஆட்டம்
இலங்கை - பாகிஸ்தான்
இடம் : துபாய்
நேரம் : 7:30 மணி